சோனியா குடும்பத்திற்கு அபாய சங்கு!

“ஊடகம் நடத்தும் காரணத்திற்காக கொடுக்கப்பட்ட இடத்தை அசோசியேட்டட் ஜர்னல் (நேஷனல் ஹெரால்டு) நிறுவனம், ஊடகத்திற்கு பதிலாக வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருவதால், அந்த இடத்தை காலி செய்ய வேண்டும்” என சென்ற ஆண்டு மத்திய அரசின் நில அபிவிருத்தி அலுவலகம் கொடுத்த உத்தரவை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றம் சென்றது (சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் பங்குதாரராக இருக்கும்) அசோசியேட்டர் ஜர்னல். டிசம்பரில் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சுனில் கௌர், “அந்த உத்தரவு செல்லும்” என்று அந்த உத்தரவை உறுதி செய்ததோடு, “யங் இண்டியன் என்பது ஒரு தொண்டு நிறுவனம் என்பதை இந்த நீதிமன்றம் அறியும் என்பதோடு, அதைக் கொண்டு அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்தின் 99% பங்குகளை வாங்கிய விதமும் கேள்விக்குரியது.” என்றும் குறிப்பிட…

மேல்முறையீடு செய்தது சோனியா குழு. அதை விசாரித்த இரு நபர் அமர்வு (டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் ஜஸ்டிஸ் வி.கே ராவ்) அந்த ஒரு நபர் அமர்வு தீர்ப்பை மீண்டும் உறுதி செய்ததோடு, “அசோசியேட்டட் ஜர்னலை யங் இண்டியன் தொண்டு நிறுவனம் நேர்மையற்ற மற்றும் மோசடியான முறையில் வாங்கியுள்ளது” என்று திரும்பவும் ஊர்ஜிதம் செய்துள்ளது…

– எவிக்‌ஷன் நோட்டீஸ் வந்ததும் இடத்தை காலி செய்யாமல் நீதிமன்றம் சென்று, அங்கே தனி நபர் அமர்வு, “இடத்தை காலி செய்” என்று சொல்வதோடு நிறுத்தாமல், “நீ வாங்கிய விதமே 420” என்று சொல்ல… மேல் முறையீட்டில் இரு நபர் அமர்வு, “ஆமாம் நீ வாங்கிய விதம் மோசடி” என்று உறுதி செய்துள்ளது. இனி உச்சநீதிமன்றம் சென்றாலும் எடுபட வாய்ப்பில்லை.. சூப்பராக சிக்கிக் கொண்டது சோனியா குடும்பம். 👍🏼

– ஏற்கனவே டாக்டர் சுப்ரமணியன் ஸ்வாமி தொடுத்த வழக்கு விசாரணையில் உள்ளது. வருமான வரித்துறையும் வழக்கு தொடுத்துள்ளது. (மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளை பார்க்கவும்).

2) அதே சோனியா தொடர்புள்ள அகஸ்ட்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் ராஜீவ் சக்சேனா (துபாயிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டவர்) அப்ரூவர் ஆக ஒப்புக் கொண்டார். அவரை மார்ச் 2இல் மாஜிஸ்டிரேட் முன்னிலையில் விவரங்களை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.