தங்கள் கட்சியினர்களான கமிஷன் ஏஜெண்ட்டுகள், சாராய ஆலை முதலாளிகள் போன்றோரின் வருமானம் பாதிக்கப் படுவதால், விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளை தூண்டிவிட்டு அவர்களின் பின்புலமாக இருந்து செயல்படுவது காங்கிரஸ் என்பது ஊரறிந்த ரகசியம். அந்த காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு தன் 74-வது பிறந்த நாளை கொண்டாடப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.
இதைத்தவிர நேற்று காங்கிரஸ் கட்சி உலக ஊழல் ஒழிப்பு தினத்தையும் அனுசரித்தது. சோனியா மிகப்பெரிய தியாகத்தை செய்துள்ளார், தங்கள் கட்சியின் ஹிமாலய ஊழல்களை காங்கிரஸ் சற்று திரும்பி பார்க்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்