சொரணை

ஹிந்துக்களுக்கு புனிதமான பன்னிரண்டு ஜோதிர்லிங்க கோயில்கள் நெடுக பரவி இருக்கின்றன. அதில் ஒன்று குஜராத்தில் உள்ள சோமநாதபுரம் சிவன் கோயில். கஜினி முகமது படையெடுப்பின்போது அந்தக் கோயில் இடிக்கப்பட்டு மசூதியாக்கப்பட்டது. பாரதம் சுதந்திரம் பெற்ற பிறகு முதல் துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் அங்குள்ள மசூதியை அகற்றி மீண்டும் சோமநாதபுரம் ஆலயம் கட்ட முடிவெடுத்தார். 1950 அக்டோபர் 10 அன்று அங்கு இருந்த அவமானச் சின்னம் அகற்றப்பட்டது. கோயில் கட்டும் பணிகள் துவங்கின. அதன் கும்பாபிஷேகம் அன்றைய ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடைபெற வேண்டும் என்று படேல் முடிவுசெய்து ராஜேந்திர பிரசாத்திடம் அதுபற்றி பேசி, அவரது ஒப்புதலையும் பெற்றுவிட்டார். ஆனால் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன்பே படேல் காலமாகிவிட்டார். அதன் கும்பாபிஷேகம் 1951 மே 11 அன்று நடைபெற முடிவாகியது. படேலிடம் கொடுத்த வாக்குறுதிப்படி ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்க முடிவெடுத்தார்.

மதசார்பற்ற நாட்டின் ஜனாதிபதி மதசார்புள்ள கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று பிரதமர் நேரு தெரிவித்தார். (இவர்கள் அகராதியில் ஹிந்துக்களுக்கு எதிராக இருப்பதுதான் மதசார்பின்மைக்கு இலக்கணமோ…?). ஆனால் பிரசாத் நேருவிடம், ஜனாதிபதி பதவியில் இருப்பதால் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று நீங்கள் கருதினால் நான் எனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளேன். முதலில் நான் ‘ஹிந்து’, இரண்டாவதுதான் ‘ஜனாதிபதி”’ என்று உறுதிபடத் தெரிவித்தார். நேருவை மீறி சோமநாதபுரம் ஆலய கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

பாபு ராஜேந்திர பிரசாத் போன்ற ஹிந்து உணர்வுள்ள, முதுகெலும்புள்ள தலைவர்களே ஒவ்வொரு ஊரிலும் தேவை.

 

எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்