சேவை, பூஜையா? தூண்டிலா?

படியேறி பாலுடன் வந்த பாலகன்

சென்னையின் வில்லிவாக்கம் பகுதி. ஒரு தெருவில் இடுப்பளவு தண்ணீர். நிவாரணப் பணியில் ஈடுபட்டு அத்தியாவசியப் பொருள்களை வீடுவீடாக விநியோகித்துக்கொண்டிருந்தார்கள் ஸ்வயம்சேவகர்கள். அவர்களுடன் வந்திருந்த ஒரு 8 வயது பாலகன் ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்துக்கொண்டு, தண்ணீர் படாமல், சர்வ ஜாக்கிரதையாக, குழந்தையின் அழுகைச் சத்தம் வந்த ஒரு வீட்டு படியேறி வீட்டில் இருந்த பெண்மணியிடம் பாலை கொடுத்தபோது அந்த தாயின் கண்ணில் இருந்து பெருகிய கண்ணீர் சென்னை வெள்ள நீரோடு கலந்தது அற்புதமான காட்சி.

 

 

ஆர்எஸ்எஸ்ஸிடம் நம்பிக்கை: முஸ்லிம்

pic_page_6சென்னை வாசிகளுக்கு ‘மீன்பாடி வண்டி’ என்றால் தெரியும். அந்த மூன்றுசக்கர சரக்கு சைக்கிள் ரிக்ஷாவில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளிலிருந்து மக்களை ஒன்றிரண்டு பேராக உட்கார வைத்து மாநகராட்சி பள்ளிக்கு பத்திரமாக கொண்டுபோய் சேர்த்துக்கொண்டிருந்தார்கள் தாம்பரம் ஸ்வயம்சேவகர்கள். அப்போது ஒரு வீட்டிலிருந்து ஒரு முஸ்லிம் தந்தை தன் குழந்தையை அந்த ஸ்வயம்சேவகர்களிடம் ஒப்படைத்து வண்டியில் கொண்டுபோய் பத்திரமாக சேர்க்கும்படி கேட்டுக்கொண்டதுடன், ஆர்எஸ்எஸ்ஸின் தொண்டுகளில் எனக்கு அபார நம்பிக்கை உண்டு” என்றும் தெரிவிக்கத் தவறவில்லை.

 

 

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தார், சிருங்கேரி, காமகோடி சங்கரமடத்தார் என பல ஹிந்து ஆன்மிக அமைப்புகள் நிவாரணப் பொருட்களை சுமந்து சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குப் போய் விநியோகித்தார்கள். வாங்கிக்கொண்ட மக்கள் அவற்றை கண்ணில் ஒற்றிக்கொண்டார்கள். இதற்கு நேர்மாறாக சில பாதிரிகளும் ‘அருள் சகோதரி’களும் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னால் பைபிளை நீட்டினார்கள். இதை பொதுமக்கள் அருவெறுப்போடு பார்த்து ஒதுங்கினார்கள்.

 

 

அன்பு எப்படி பாரமாகும்?

முதல் மாடியில் தஞ்சம் புகுந்திருந்த ஒரு முஸ்லிம் தாயும் மகனும் ஸ்வயம்சேவகர்களின் மீன்பாடி வண்டியில் அமர்ந்து பத்திரமான இடத்துக்கு சென்று சேர்ந்தார்கள். 20 வயதான அந்த முஸ்லிம் இளைஞன் காய்ச்சலில் துவண்டிருந்தான்; அவனை இரண்டு ஸ்வயம்சேவகர்கள் மாடியிலிருந்து தூக்கிக்கொண்டுவந்து வண்டியில் அமர்த்தினார்கள்; அதைப் பார்த்த அந்த முஸ்லிம் தாய்க்கு மனது நிரம்பி கண்ணீர் பெருகியதில் வியப்பே இல்லை.