சேவையில் ஹிந்து யுவ சேவா

அமெரிக்காவில்  மத்திய மேற்கு பிராந்தியத்தைச் சேர்ந்த 25 பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் ஹிந்து யுவா மற்றும் ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம் (ஹெச்.எஸ்.எஸ்) சிகாகோ பிரிவைச் சேர்ந்தவர்கள் இணைந்து லேக் கவுண்டி, கிரேஸ்லேக், பகுதியில் வருடாந்திர ஹிந்து யுவா ரிட்ரீட் திட்டத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள ஹிந்து கோயிலில் சேவை பணிகளில் ஈடுபட்டனர். கோயிலின் முன்னாள் தலைவர் டாக்டர் ஹர்ஷ் குமார், அனைத்து ஹிந்து யுவா தன்னார்வலர்களுக்கும் சால்வை அணிவித்து, அவர்களின் சேவை செயல்பாடுகளைப் பாராட்டினார்.

ஹிந்து யுவா அமைப்பினர் அமெரிக்கா முழுவதும் உள்ள 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஹிந்து தர்மத்தைப் பற்றிய அறிவை வளர்க்க ஷாகா எனப்படும் வாராந்திரக் கூட்டங்களை ஏற்பாடு செய்வது, கலந்துரையாடல்களை நடத்துவது உள்ளிட்ட பல பணிகளை செய்து வருகின்றனர். ஹிந்து யுவா அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து அதன் 15 ஆண்டு சேவை பணிகளில், 39 பல்கலைக்கழக வளாகங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோயின்போது தங்களை சுற்றியுள்ள சமூகங்களுக்கு உதவுவதில் முன்னணியில் இருந்தனர் ஹிந்து யுவா இளைஞர்கள் என்பது பாராட்டத்தக்கது.