சூரிய நமஸ்காரத்தின் அறிவியல்

அகில இந்திய ஆயுர்வேத நிறுனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல யோகாசனங்கள் குறித்து ஆராய்ச்சி அடிப்படையில் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ள ‘சூரிய நமஸ்காரத்திற்கு பின்னால் உள்ள அறிவியல்’ என்ற புத்தகத்தை மத்திய ஆயுஷ் மற்றும் குழந்தைகள், மகளிர் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் முன்ஞ்பாரா மகேந்திரபாய் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அகில ஆயுர்வேத நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் தனுஜா மனோஜ் நேசரி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மகேந்திரபாய் அறிவியல் அடிப்படையில், பாரத பாராம்பரியம் மற்றும் நடைமுறைகள் குறித்து எடுத்துரைக்க மேற்கொண்ட முயற்சிக்காகவும், கடின உழைப்புக்காகவும் ஆயுர்வேத நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நோய் எதிர்ப்பு சக்தி, சுற்றுச்சூழல், சுகாதாரம், சிகிச்சைச் சார்ந்த யோகா மற்றும் அடிப்படை புள்ளியியல் குறித்த அமர்வுகள் பாரதத்தில் ஆயுர்வேதப் படிப்புகளின் நிலையை மேம்படுத்தும் என்று தெரிவித்தார்.