சூரிய ஆற்றல் பயன்பாடு

குஜராத் அரசு சூரிய ஒளி பயன்பாட்டுக்கு என புதிய கொள்கையை அறிவித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்ட புதிய கொள்கையால்  சூரிய ஒளி மின்னாற்றல் பயன்பாடு மேலும் அதிகரிக்கும். சாதாரண மக்கள், தொழிற்சாலைகள் என பலரும் பயன்படும் விதத்தில் இந்த கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் தற்போது 11,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த புதிய கொள்கையால் அது 30,000 மெகாவாட்டாக உயரும் என கூறப்படுகிறது. வருங்காலத்தில் பாரதத்தில் மாற்று எரிசக்தி துறையில் 1.75 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். இதனால் 2022க்குள் 175 ஜிகாவாட் மாற்று எரிசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.