சூரியவெடிப்பை படம் பிடித்து அனுப்பியது ஆதித்யா எல்-1 விண்கலம்

சூரியனை ஆய்வு செய்ய, கடந்த 2023 செப்., 2ல், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள, எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி இந்தாண்டு (2024) ஜனவரியில் எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடைந்தது.

இந்நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம், கடந்த 11-ம் தேதியன்று ஏற்பட்ட சூரிய வெடிப்பின் பல்வேறு பகுதிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளதாக இஸ்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.