கேரளாவில் உள்ள மாணவர்களுக்கு ஹிந்தி கற்றலை கவர்ச்சிகரமானதாகவும் எளிதாகவும் ஆக்க ‘சுருளி ஹிந்தி’ என்ற புதிய வழிமுறையை கேரள அரசு ஏற்படுத்தி உள்ளது. கேரள கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி இந்த முயற்சியைத் தொடங்கி வைத்து பேசுகையில், இந்த புதிய பதிப்பில் டிஜிட்டல் அனிமேஷன், பொம்மலாட்டம், கியு.ஆர் கோடுகள் உள்ளிட்ட நவீன முறைகள் பின்பற்றப்படும். இந்த முயற்சியை செயல்படுத்த ‘சமக்ரா ஷிக்ஷா கேரளா’ பொறுப்பேற்றுள்ளது. இந்த டிஜிட்டல் கல்வி முறை அனைத்தும் கேரளாவின் கல்வி மேற்பார்வை (SCERT) அமைப்பின் கீழ் பணிபுரியும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் குழுவால் உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். ஹிந்தியை எதிர்த்து அரசியல் செய்தே பழகிவிட்ட இங்குள்ள கம்யூனிஸ்ட்டு கட்சிகளும் அவர்களது கூட்டணியான தி.மு.க, வி.சி.க போன்றோரும் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?