நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பும் சுதேசி ஜாக்ரன் மன்ச் (விழிப்புணர்வு இயக்கம்) பற்றி அறிவோம்…
“சுதேசி” என்ற வார்த்தை மிகவும் மகத்துவப்பூர்வமானது. இயற்கையாகவே பாரதிய மனநிலையை பிரதிபலிக்கக்கூடிய வார்த்தையாகவும் இருக்கிறது. சுதந்திர உணர்வை தட்டி எழுப்பியதில் சுதேசி என்ற சொல் பெரும் பங்கு வகித்தது.
நாம் சுதந்திரம் பெற்றதில் இருந்து 1991 ஆம் ஆண்டு வரை, “சோசலிஸம்” மற்றும் மேற்கத்திய பொருளாராதர முறையை கலந்து, நடுத்தர பொருளாதார முறையை பின்பற்ற முயற்சி செய்தோம். 1991 ஆம் ஆண்டு நாம் உலக அளவிலும், தேசிய அளவிலும் மிகப்பெரும் சவாலை சந்திக்க நேர்ந்தது. உலக அளவில் குறிப்பாக, ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், கம்யூனிஸ்ட் சித்தாந்தம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் முதலாளித்துவம் என்ற சிந்தனை மாத்திரமே வளர்ச்சிப் பாதை என்ற கருத்தை ஏற்படுத்த உலக அளவில் பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சர்வதேச வியாபாரத்தை மேற்கத்திய நாடுகள் அவர்களுக்கு மாத்திரமே பயன்படுமாறு, உலக வர்த்தக நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.
நாட்டில் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், அன்னியச் செலாவணியை பெருக்குவது ஒன்றையே மையமாக வைத்து, சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் சர்வதேச கடன் இலக்குகளை சமாளிப்பதற்காக, நம்மிடம் இருந்த தங்கத்தை பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளில் அடகு வைக்க நேரிட்டது.
இதன் தீர்வாக உலக மற்றும் நம் நாட்டில் 1991 ஆம் ஆண்டு நிலவிய சூழ்நிலை சுதேசி பொருளாதார சிந்தனையை மீண்டும் தட்டி எழுப்பி பின்பற்ற வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது. இந்த உலக சிந்தனையும், நம்முடைய பொருளாதாரத்தை நம் வளர்ச்சிக்கு ஏற்றவாறு முறைப்படுத்தவும், ஒரு மாற்று சிந்தனைக்கான அவசியம் ஏற்பட்டது.
இதன் அடிப்படையில் 1991 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் மூத்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் தத்தோபந்த் தெங்கடி அவர்கள் வழிகாட்டுதலில், நம்முடைய பாரத கலாச்சாரத்தை பிரதிபலிப்பதற்காக “தேசிய சுதேசி இயக்கம்” உருவாக்கப்பட்டது. இதில் தேசிய சிந்தனைக் கொண்ட பொருளாதார வல்லுனர்களும், சமூக சிந்தனையார்களும் தங்களை இணைத்துக் கொண்டார்கள். கடந்த 30 ஆண்டுகளில், மிகப்பெரிய மாற்று பொருளாதார சிந்தனையை உலக அளவிலும் சரி, நம் நாட்டிலும் சரி இந்த இயக்கம் உருவாக்கியது.

அடிப்படை சிந்தனைகள்:
உலகத்தை வழி நடத்தக் கூடிய பொருளாராதர தத்துவம் என்ற ஒன்று கிடையாது. ஒவ்வொரு நாட்டிற்கும், சூழ்நிலைக்கும், காலத்திற்கும் ஏற்றவாறு இது மறுபட்டுக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு பொருளாதார முறையை உடையது.
பாரத நாடு கடந்த காலத்தில் வளமையான நாடாக இருந்தது. உலக பொருளாதாரத்தில் 25-−30% வரை நம்முடைய பங்கு இருந்தது. இன்றைய வளர்ச்சிக்கான காரணத்தை கண்டறிந்து, மீண்டும் வளமையான பாரதத்தை உருவாக்கும் பாதையை வகுக்க வேண்டும்.
நம் மக்களிடையே நம்பிக்கை அதிகரிப்பதற்காக பிரச்சினைகளை மாத்திரம் பேசாமல் சிறப்புகளை பற்றியும் விவாதிக்க வேண்டும். உதாரணமாக மிகவும் சிறப்பான விவசாய நிலங்கள் பாரதத்தில் உள்ளது. ஆண்டிற்கு மூன்று முறை உற்பத்தி செய்ய முடியும்.
நம்முடைய பொருளாதாரத்தில் குறுந்தொழில் நிறுவனங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும், ஏற்றுமதியிலும், உற்பத்தியிலும் இந்தத்துறை பெரும்பங்கு வகிக்கிறது. இது மற்ற நாடுகளின் முறையிலிந்து மாறுபட்டதாகும்.
நமது மொத்த பொருளாதாரத்திலும், இது பெரும் பங்கு வகிக்கின்றது. வேலைவாய்ப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறைகளில் 30-−40% வரை இதன் பங்கு உள்ளது. இது மற்ற நாடுகளிலிருந்து மாறுபட்டதாகும்.
குடும்ப வாழ்வு முறை என்பது நம் கலாச்சாரமாகும். வளமையான பொருளாதாரத்திற்கு, இது பெரும் பலம் சேர்கிறது. மேற்கத்திய நாடுகளில் இந்த முறை இல்லை. இது தேசத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. சேமிப்பு சிந்தனையும், தேவையற்ற செலவு செய்யாத முறையும் நம் தேசத்தின் அடிப்படை சிந்தனை.
உலக பொருளாதாரம் சீராகவும், ஒருவரது அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும். பரவலாக அனைவருக்கும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். 1991ல் நிலையை உலக மற்றும் தேசிய பொருளாதார சூழ்நிலையை தீவிரமாக ஆய்வு செய்து, நமக்கென்று ஒரு பொருளாதார வளர்ச்சிப் பாதையை உருவாக்குவதற்காக பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 30 ஆண்டுகள் முயற்சியின் காரணமாக, முதலில் பட்டியலிடப்பட்டுள்ள கருத்துகள், உலகம் முழுவதிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 3௦ ஆண்டுகள் :
கடந்த 3௦ ஆண்டுகளில், “சுதேசி இயக்கம்” நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக, பல அறிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளில், நம் வளர்ச்சிக்கு தேவையான வழியில் செயல்படுத்துவதற்காக போராடி பல வெற்றிகளை கண்டிருக்கின்றது.
வெற்றிபெற்ற முயற்சிகள் :
நம்முடைய அன்றாட வாழ்க்கையில், நம் பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களையே உபயோகிப்பது என்ற வாழ்க்கை முறை பற்றிய நாடு தழுவிய பிரச்சாரம். இதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறோம். அந்நிய முதலீடு தேவைப்படுகிற அளவிற்கு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் துறைகளில் மாத்திரமே அனுமதிக்க வேண்டும் என்ற சிந்தனை அரசின் கொள்கைகளில் உருவாக்கியது.
ஆழ்கடல் மீன்பிடிப்புத்துறையில் பெரிய கப்பல்களை பயன்படுத்த தடை. இதனால் கோடிக்கணக்கான மீனவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். கடல் வளம் சீராக இருக்கிறது. பீடித் தொழிலாக்கம் மற்றும் கைத்தறித் தொழில்கள் உற்பத்தி மற்றும் ஆதரவு. நாடு முழுவதும் 5 லட்சம் புத்தாக்க தொழில் உருவாக்குவதற்கான முயற்சி.
கொரோனாவிற்கு பிறகு உலக பொருளாதார சிந்தனையிலும் சுதேசியின் தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது. நம்முடைய நாட்டின் வலிமைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி நம்பிக்கை ஊட்டுவதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறது. இவ்வுலகத்திலேயே மிக வேகமாக வளரும் நாடு என்ற சிறப்பையும், வரும் 15-−20 ஆண்டுகளில் மிக வலிமை வாய்ந்த பொருளாதாரமாக பாரதத்தை உருவாக்குவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நம்முடைய நாட்டின் மனித வளத்தை முழுமையாக பயன்படுத்தி, ஏற்ற தாழ்வில்லாத பரவலாக்கப்பட்ட பொருளாதாரம் என்பது நம் கொள்கையாகும். கடந்த 4 ஆண்டுகளாக “சுயசார்பு பொருளாதாரம் – நமது லட்சியம்” என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நம்முடைய அனைத்து மாநிலத்திலும், 500க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலும் சுதேசி இயக்கம் செயல்பட்டு வருகிறது. பழமையான நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் சிந்தனைகளை தீவிரமாக ஆய்வு செய்து, அதை பின்பற்றுவதற்காக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த இயக்கம் ஆரம்ப காலம் முதல் தமிழகத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தேசத்தை வலுப்படுத்தும் பல சிந்தனைகளுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.
இயக்க ரீதியிலும், சித்தாந்த ரீதியிலும் மற்றும் அறிவுசார் ரீதியிலும் சுதேசி இயக்கம் தொடர்ந்து ஆத்ம பரிசோதனை செய்து வளர்ந்து வருகிறது. காலத்திற்கேற்ப சுதேசி சிந்தனை பாரிணாமங்களும் மாறுகின்றன. இன்றைய உலகம் பொருளராதார ரீதியாக பல சவால்களை சந்திக்கிறது.
வர்த்தகத்தில் வியாபாரம் தவிர பிற சக்திகளும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அசாதரமான சூழலில், நம்முடைய வளர்ச்சிப் பயணம் தொடர்ந்து உலகிற்கு வழிகாட்ட வேண்டும். கீழ்கண்ட துறைகளில் சுதேசி இயக்கம் விரிவாக்கம் செய்து பணியாற்றி வருகிறது.
MY SBA.co.in – இதில் வேலைவாய்ப்பு, தொழில் தகவல் மற்றும் உதவும் திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள்.
சுதேசி ஆராய்ச்சி மையம் மற்றும் – நியூ டெல்லி:-
உலக நாடு தழுவிய மாநில, மாவட்ட ரீதியான பொருளாதார ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. டெல்லி தீனதயாள் அமைப்பால், சுமார் 50 ஆய்வு செய்வோர் இதில் பணியாற்றுகிறார்கள்.
நம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களை தொழில் முனைவோராக உருவாக்குவதற்காக, கடந்த 4 ஆண்டுகளாக “சுதேசி இயக்கம்” பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தொழில் முனைவோர் இருக்க வேண்டும் என்பது லட்சியம். அதற்கு தொழில் நுட்பம் (Technology) மிகவும் அவசியம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு புதிய முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பம் உருவாக்குவதற்கான திட்டம் இது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்களை, அந்தந்தப் பகுதி மக்கள் அறிந்து உபயோகப்படுத்தும் வகையில், தேசம் முழுவதிலும் “சுதேசி பொருட்காட்சி” நூற்றுக்கணக்கான இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாரதத்தின் சிறப்புகளான நம்முடைய உணவு, உடை பற்றிய தகவல்களும் வெளிப்படுத்தப்படுகின்றது.
நம்முடைய ஆதரவாளர்களுக்கும், முழுநேரப் பணியாளர்களுக்கும் தொடர்ந்து பயிற்சி வழங்கி, 2047ல் சிறப்பான வளர்ந்த பாரதம் அமைய ஒருங்கிணைந்த திட்டம் மற்றும் செயல்பாடுகளை, சுதேசி ஜாக்ரன் மன்ச் (விழிப்புணர்வு இயக்கம்) அனைத்து துறைகளிலும் சிறப்பாக செய்து வருகிறது.
கட்டுரையாளர்: – ஆடிட்டர் சுந்தரம்
அகில பாரத அமைப்பாளர், சுதேசி ஜாக்ரன் மன்ச்