சீனாவின் நான்ஞ்சிங் லுகோவ் சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த புதிய நோய்த்தொற்று குறைந்தது பத்து நகரங்களுக்கு பரவியிருக்கலாம் என சீன அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நான்ஞ்சிங்கில் அனைத்து விமான சேவைகளும் ஆகஸ்ட் 11 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஷாங்காயின் வடமேற்கில் உள்ள நான்ஞ்சிங்கின் பல்லாயிரக்கணக்கான மக்களை வீட்டிலேயே இருக்குமாறு சீன அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் சமீபத்தில் மியான்மருக்கு சென்று வந்ததாக யுன்னான் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே மியான்மருடனான சீனாவின் தென்மேற்கு எல்லையில் உள்ள யுன்னான் மாகாணத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சீன அதிகாரிகள் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.