சீனாவிடமிருந்து ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு இரண்டு கோடியே 26 லட்சம் ரூபாய் வரை நன்கொடைகள் பெறப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. நாடு முக்கியமாஇல்லை நன்கொடை முக்கியமா என்றும் பாஜக தலைவர்கள் காங்கிரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். 2005-06ம் ஆண்டுகளில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனத் தூதரகம் மூலமாக நன்கொடை அளிக்கப்பட்டது என்றும் இந்த நன்கொடை பொது நன்கொடையாளர்கள் என்ற பெயரில் கட்சியின் அறக்கட்டளைக்கு சேர்க்கப்பட்டது என்றும் பாஜக விமர்சித்துள்ளது .
இந்த அறக்கட்டளைக்கு தலைவராக சோனியா காந்தி இருந்ததாகவும் ராகுல்காந்தி மனமோகனசிங் , பிரியங்கா காந்தி , ப.சிதம்பரம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்ததாகவும் பாஜக தெரிவித்துள்ளது . சீனாவுடன் ரகசிய வர்தக ஒப்பந்தம் மேற்கொண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சீன அதற்காக இந்த நன்கொடையை பெற்றுக் கொண்டதா என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் சர்ச்சை கிளப்பி உள்ளது.