சி.பி.ஐக்கு வழக்கை மாற்றுங்கள்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, “விழுப்புரம் மரக்காணம், மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சி.பி சி.ஐ.டி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது வெறும் கண்துடைப்பு. இந்த விசாரணையை சி.பி.ஐ யிடம் ஒப்படைக்க வேண்டும். மதுபான உற்பத்தி ஆலைகளில் உற்பத்தி ஆகும் 60 சதவீதம் மதுதான் டாஸ்மாக்குக்கு போகிறது. மீதம் 40 கள்ளச்சந்தைக்கு போகிறது. ஜூன் 15ம் தேதிக்குள் டாஸ்மாக்கை மூட வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் உள்ள மது உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும்” என கூறினார்.