‛‛ சிவில், கிரிமினல் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது”, என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் மேலும் கூறியுள்ளதாவது: உயர்நீதிமன்றங்களுக்கு உட்பட்ட மற்ற நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் வெவ்வேறு தனித்தன்மை கொண்டவை. வழக்குக்கான முன்னுரிமையை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் நிர்ணயிப்பது தான் சரியானதாக இருக்கும். விசாரணை நீதிமன்றங்கள் வழக்கை விசாரிக்க காலக்கெடுவை அரசியல் சாசன நீதிமன்றங்கள் விதிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.