சிறுதானியம் கொள்முதல் ஆகஸ்ட் வரை அனுமதி

விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்கள் கொள்முதல் செய்ய, தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, பல்வேறு ஊட்டச்சத்து திட்டங்களுக்கு சிறுதானியங்களை வழங்குகிறது. அதற்காக, தமிழக விவசாயிகளிடம் இருந்து, 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்து தரும் பணியை, நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைத்து உள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல், கடந்த டிசம்பரில் துவங்கியது. இதற்காக விவசாயிகளுக்கு, 100 கிலோ எடை உடைய கேழ்வரகுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையாக, 3,846 ரூபாய் வழங்கப்படுகிறது.

இதுவரை, 150 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கொள்முதல் சீசன் இம்மாதம் முடிவடைகிறது. எனவே, ஆண்டு முழுதும் கொள்முதல் செய்ய அனுமதிக்குமாறு வாணிபக் கழகம், இந்திய உணவு கழகத்திடம் கேட்டது. அதனால், ஆகஸ்ட் வரை அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.