பாரதிய ஜனதா கட்சியின் மூல வடிவம் பாரதிய ஜன சங்கம். ஆர். எஸ். எஸ்ஸின் ஆசியுடன் ஜன சங்கம் நிறுவிய டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, அதற்கு 10 ஆண்டுகள் முன்னதாக ஆர் எஸ் எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவாரை சந்தித்தார். ஹிந்துஸ்தானத்தின் கலாச்சார அடையாளம் அனைவரையும் அரவணைக்கும் தன்மையுள்ள ஹிந்துத்துவம் என்பது முகர்ஜி மனதில் தெளிவாக பதிந்தது. கட்சி தொடங்கிய வேளையில் முகர்ஜி வேண்டுகோளின் பேரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது சர்சங்கசாலக் ஸ்ரீ குருஜி கோல்வல்கர், அரசியல் பணிக்கு தீனதயாள் உபாத்யாய, அடல்பிகாரி வாஜ்பாய் ஆகிய இரு சங்க கார்யகர்த்தாக்களை அனுப்
பினார். தேசத்தின் கலாச்சார சக்தி எது என்பதை நன்கு உணர்ந்திருந்த சியாமா பிரசாத் முகர்ஜி பாரத தேசிய ஒருமைப்பாட்டை கட்டிக் காப்பதற்காகவே பலிதானமானார் என்பது தமிழ் கூறும் நல்லுலகிற்கு அதி முக்கிய சேதி. படியுங்கள்:
ல்கத்தாவில் 1901 ஜூலை 6 அன்று பிறந்த சியாமா பிரசாத், கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் வங்காளத்தில் தனி இடத்தைப் பெற்ற தனது தந்தை ஆசுதோஷ் முகர்ஜியிடமிருந்து புலமை, தேசிய உணர்வு, அச்ச
மின்மை ஆகியவைப் பெற்றார். அவரது தாயார் யோகமாயா தேவி ஹிந்துப் பெண்மணிகளுக்கே உரிய பக்தி வாய்க்கப் பெற்றவர்.
கல்வி
கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் படித்து 1919ல் பல்கலைக்கழகத்திலேயே கலைப் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றார். 1921ல் ஆங்கிலத்தில் பி.ஏ. ஹானர்ஸ் தேர்வில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றார். ஆனால் தேசபக்தி உணர்வு காரணமாக எம்.ஏ ஆங்கில பாடம் எடுப்பதை தவிர்த்தார். வங்காளியையும் ஆங்கிலத்திற்கு பதிலாக மற்றொரு பாரதிய மொழியையும் எடுத்து எம்.ஏ. முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றார். வங்காளி
யும் பிற பாரதிய மொழிகளும் பல்கலைக்கழக அளவில் கல்வியில் சரியான இடத்தைப் பெற வேண்டும் என்ற தனது தந்தையின் கொள்கையின்படி அவ்வாறு செய்தார்.
சியாமா பிரசாத் சுதா தேவியை மணந்தார் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த சுதா தேவி 1934ல் இறந்தார். அப்போது சியாமா பிரசாத்துக்கு வயது 33 தான். ஆனால் அவர் மறுமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தார்.
1922ல் ‘வங்க பாணம்’ என்ற வங்காளி இதழைத் தொடங்கிய அவர், 1923-–24ல் ‘டிச்’ என்ற புனைப்
பெயரில் ‘கேபிடல்’ இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். ஆரம்பத்தில், பத்திரிகையுடனான அவரது உறவு குறுகிய காலத்திற்கே. ஆனால் பின்னாளில் “த நேஷனலிஸ்ட்” என்ற தினசரி செய்தித்தாளை வெளியிட்டார்.
1924ல் பி.எல். தேர்விலும் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றார். டி.லிட், எல்.எல்.டி. பட்டங்களையும் பெற்றார். ஆனால் அவர் வழக்கறிஞர் தொழில் செய்யவில்லை.
மாணவப் பருவத்தில் இருந்தே, கல்கத்தா பல்கலைக் கழகப் பணிகளைக் கவனிப்பதில் தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். துணைவேந்தராக இருந்த தனது தந்தையின் கல்வித் திட்டங்கள், கொள்கைகள் குறித்து அவருக்கு ஆழ்ந்த புரிதல் இருந்தது. 1924ல் அவர் பல்கலைக்கழக செனட் / சிண்டிகேட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வங்காள சட்டசபையில் காங்கிரஸ் வேட்பாளராக கல்கத்தா பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1930ல் சட்டமன்றங்களை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்தபோது, அவர் சட்டமன்ற கவுன்சிலில் இருந்து ராஜினாமா செய்தார். ஆனால் விரைவில் தனது பல்கலைக்கழகத்தின் நலன்
களைப் பாதுகாக்க சுயேச்சை வேட்பாளராக சட்டமன்ற கவுன்சில் உறுப்பினரானார்,
ஒரு தேசியவாதியாக
1937ல் இந்திய அரசு சட்டம் 1935-ன் மாகாணங்களுக்
கான பகுதி இயற்றப்பட்டு, மாகாண சட்டமன்ற தேர்தல்கள் மூலம் நாட்டின் நிலைமை ஒரு புதிய திருப்பம் கண்டது. அவர் மீண்டும் பல்கலைக்கழகத் தொகுதியிலிருந்து வங்க சட்டமன்ற உறுப்பினரானார். இது அவருக்கு மாகாண சுயாட்சியின் செயல்பாட்
டைக் கூர்ந்து ஆய்வு செய்ய வாய்ப்பை வழங்கியது. 250 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் ஹிந்துக்களுக்கு 80 இடங்கள் மட்டுமே. அதில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள உறுப்பினர்கள் முஸ்லீம்களும் பிரிட்டிஷ் நலன்களைப் பாதுகாப்பவர்
களும். முஸ்லிம் உறுப்பினர்
கள் முஸ்லிம் லீகிலும், கிருஷக் பிரஜா கட்சியிலும் பிரிந்து இருந்தனர். காங்கிரஸ் கட்சி, கிருஷக் பிரஜா கட்சி
யுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்திருந்தால், வங்காளத்தில் முஸ்லிம்லீக் இல்லாத நிரந்தர ஆட்சி அமைந்திருக்கும்.
முஸ்லிம் லீக் ஆட்சிக்கு வந்ததும், தந்தையும் தானும் மிகவும் விடாமுயற்சியுடன் கட்டியெழுப்பிய கல்விக் கட்டமைப்பைத் தாக்க முடிவு செய்தது. தேசிய நலன்களைப் புறக்கணித்து முஸ்லிம் லீக்குடன் சமரசம் செய்து கொள்ளும் இந்திய தேசிய காங்கிரஸின் கொள்கை அவரது உள்ளார்ந்த தேசபக்திக்கு முரணானது, எனவே அவரது மனசாட்சி அவரைச் செயல்
பட வைத்தது. முஸ்லிம் லீகை ஆட்சியில் நீடிக்க விடக்
கூடாது என்று காங்கிரஸ் தலைவர்களை நம்பவைப்பதில் அவர் வெற்றி பெறாததால் முஸ்லிம் லீக் அரசைக் கவிழ்க்க அவர் தனியாக முயற்சி செய்தார். சட்டமன்றத்
தில் அனைத்து காங்கிரஸ் அல்லாத ஹிந்து சக்திகளை
யும் ஒருங்கிணைத்தார். கிருஷக் பிரஜா கட்சியில் இணைந்ததன் மூலம், ஃபசல்- உல்-ஹக் தலைமையில் ஒரு முற்போக்கான கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்டது, அதில் அவரே நிதி அமைச்ச
ரானார். இந்த முயற்சி
யின் மூலம் அவர் யதார்த்த
மான, தொலைநோக்கு அரசியல்வாதியாக புகழ் பெற்றார்.
அதே காலகட்டத்தில், வீர சாவர்க்கரின் உத்வேகத்தால், சியாமா பிரசாத் ஹிந்து மகாசபையில் சேர்ந்து, தேச விரோத சக்திகளை முறியடிக்க வழிவகை தேடினார். 1939ல் அவர் அதன் செயல் தலைவர் ஆனார். ஹிந்து மகாசபையின் அரசியல் இலக்கு முழுமையான சுதந்திரத்தை அடைவதே என அறிவித்தார். மதன்மோகன் மாளவியாவுக்குப் பிறகு, ஹிந்துக்களுக்கு வழிகாட்ட ஒரு திறமையான நபர் தேவை என்று காந்திஜி நம்பியதால், அவர் ஹிந்து மகாசபையில் சேருவதை மகாத்மா காந்தி வரவேற்றார்.
1943ல், சியாமா பிரசாத் வங்காள அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். காவல்துறையிலும் பொது நிர்வாகத்திலும் மாகாண அரசாங்கத்தின் செயல்பாட்டில் ஆளுநர், அதிகார வர்க்க தலையீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மிகவும் பெருமையாகக் கூறப்பட்ட மாகாண சுயாட்சியை ‘கேலிக்குரியது’ என்று விவரித்தார். அமைச்சர் பதவியை அவர் நிராகரித்த விதம், அவரைப் போன்ற ஒருவரை எந்த விதமான தூண்டுதலும் கடமையின் பாதையில் இருந்து திசை திருப்ப முடியாது என்பதை தெளிவாக உணர்த்தியது.
1940ல் லாகூரில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லீம் லீக் மாநாட்டில் ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை எழுப்பினார். முகர்ஜி அந்த கோரிக்கையை பகிரங்கமாக எதிர்த்தார். முகர்ஜி தனது உரையாடல் திறனைப் பயன்படுத்தி ஜவஹர்லால் நேரு, ஜின்னா இடையேயான உரையாடலை எளிதாக்கினார். ஆனாலும் தேசப் பிரிவினையை கடுமையாக எதிர்த்தார்.
ஜனசங்கத்தின் நிறுவனர்
அமைச்சரவையில் இருந்து விலகிய பிறகு, ஜாதி, மதம் பாராமல் அனைத்து பாரத மக்களுக்கும் அதன் கதவுகளைத் திறக்க வேண்டும் என்ற அவரது பரிந்துரையை ஹிந்து மகாசபை நிராகரித்ததால் அவர் ஹிந்து மகாசபையை விட்டு வெளியேறினார்.
எதிர்க்கட்சியில் புதிய தேசிய தலைமையை உருவாக்க சியாமா பிரசாத் முடிவு செய்தார். அவரது முயற்சியின் விளைவாக, பாரதிய ஜனசங்கம் 1950 அக்டோபரில் முறையாக நிறுவப்பட்டது. இந்தப் புதிய அமைப்பின் முதல் அகில பாரத தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சியாமா பிரசாத் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ்ஸின் அன்றைய தலைவர் ஸ்ரீ குருஜி கோல்வல்கரை சந்தித்து கேட்டுக் கொண்டதன் பேரில் தீனதயாள் உபாத்தியாயா, அடல் பிகாரி வாஜ்பாய் ஆகிய இருவரும் முகர்ஜியுடன். ஜனசங்க பணியில் தோள் கொடுக்கத் தொடங்கினார்கள்.
நாட்டில் பரந்த அளவில் தேசிய சக்திகளின் புதிய முன்னணி அமைப்பாக ஜனசங்கத்தைப் உருவாக்கும் முயற்சி தொடங்கியது. அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு அரசியல் அமைப்பாக, கலாச்சாரத்தின், பாரம்பரியத்தின் அடிப்படை
யில் தேசபக்தி கொண்ட அனைத்து குடிமக்களுக்கும் ஜனசங்கத்
தின் கதவு திறந்திருக்க வேண்டும் என்பது அவர்கள் கனவு.
புதிய கட்சிக்கான அவசியத்தை விளக்கிய முகர்ஜி, “காங்கிரஸ் ஆட்சியில் சர்வாதிகாரம் நிலவுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, ஆளும் கட்சியை திறம்பட கட்டுப்
படுத்தி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நன்கு ஒழுங்
கமைக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் இல்லாததுதான்” என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினராக
1952ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் சியாமா பிரசாத் முதல் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நிறுவிய ஜனசங்க கட்சியினர் இருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் மனம் தளரவில்லை. எதிர்க்கட்சிகள் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்றார்.
அவரது ஆளுமையில் சிறந்து விளங்கியது அனை
வரும் அவரை ஏற்கும் நிலை. ஆளும் கட்சி கூட அவரை முறைசாரா எதிர்க்கட்சித் தலைவராகவே கருதியது.
“சர்தார் படேலின் மறு உருவம் சியாமா பிரசாத் முகர்ஜி” என்று பொருள் பொதிந்த விதத்தில் அவருக்குப் புகழாரம் சூட்டியது டைம்ஸ் ஆஃப் இந்தியா. சர்தார் படேல் தனது வாழ்
நாளில் அரசாங்கத்தின் மீது கொண்டிருந்த அதே வகை
யான சமநிலையான, கட்டுப்
படுத்தும் செல்வாக்கை நேரு அரசாங்கத்தின் மீது வெளியில் இருந்து செலுத்
தினார் டாக்டர் முகர்ஜி. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் வகித்த பங்கு அவருக்கு “நாடாளு
மன்றத்தின் சிங்கம்” என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.
தேச ஒற்றுமைக்காக பலிதானம்
இந்த நேரத்தில், ஜம்மு–-காஷ்மீரில் பிரிவினைவாத நடவடிக்கைகளை முடிவுக்
குக் கொண்டுவரும் பிரச்சினை ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர் பிரஜா பரிஷத் அதற்காக போராடி வந்தது. மாநிலத்தை இந்தியாவுடன் முழுமையாக இணைக்க வேண்டும், மற்ற மாநிலங்களுக்கு பொருந்தும் அதே அரசியலமைப்பு இதற்கும் பொருந்த வேண்டும் என்று கோரியது. 1952ல் அவர் ஜம்முவிற்கு விஜயம் செய்தபோது, ஒரு பெரிய பொதுக்கூட்டத்தில், “நான் உங்களை இந்திய அரசியலமைப்பின் கீழ் கொண்டு வருவேன், இல்லையெனில் அதற்காக என் உயிரைத் தியாகம் செய்வேன்” என்று அறிவித்தார். அவருடைய வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக மாறியது. ஜம்முவில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்வதற்காக 1953 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் ஜம்முவிற்குச் செல்ல முடிவு செய்தார். இந்த நேரத்தில் அவரது உடல்நிலை சரியில்லை. ஹிந்துக்கள் மீது அவருக்கு இருந்த அன்பு அளவற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை தேசத்துடன் முழுமையாக சங்கமிக்கச் செய்வதில் அவர் முனைப்பாக இருந்தார். அவர் உடனடியாக ஜம்முவுக்குச் சென்றார், அங்கு அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட அவர், தேச ஒற்றுமைக்காக உயிர்த் தியாகம் செய்தார்.
தகவலுக்கு நன்றி : விஸ்வ சம்பாத் கேந்திரம்
முகர்ஜியின் தொண்டுள்ளம்
வங்காளத்தில் 1943-ல் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, சியாமா பிரசாத்தின் மனிதாபிமானத்தை தேசம் கண்டது. சிலருக்கு அவரது அரசியல் பிடிக்கவில்லை என்றாலும். வங்காளத்தின் நெருக்கடி குறித்து நாட்டின் கவனத்தை ஈர்க்கவும், பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய அளவில் நிவாரணம் வழங்கவும், அவர் முன்னணி அரசியல்
வாதிகள், வணிகர்கள், வள்ளல்களை அணுகி ஏழைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்க முன்வருமாறு அழைப்பு விடுத்தார். இதன் விளைவாக, வங்காள நிவாரணக் குழு அமைக்கப்பட்டது ஹிந்து மகாசபா நிவாரணக் குழுவும் உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு அமைப்புகளுக்கும் உத்வேகம் அளித்தவர் சியாமா பிரசாத். அவர் விடுத்த வேண்டுகோள் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, இதற்காக பெரும் தொகை வரத் தொடங்கியது. நாடு முழுவதும் ஒன்று திரண்டு நிவாரணம் அளித்து லட்சக்கணக்கான வங்க மக்களை மரணத்தில் இருந்து காப்பாற்றியது அவரது தொண்டுள்ளத்தின் பெருமை.
சுதந்திரம் அடைந்த பிறகும், பஞ்சத்தில் அல்லல்படும் மக்களை அவர் மறக்கவில்லை. ‘‘ஒவ்வொரு எம்.பியும் தானாக முன்வந்து உதவித்தொகையில் ௧௦ ரூபாய் குறைத்துகொண்டு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வீடு, உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
அகண்ட பாரத போராளியாக
மதத்தின் அடிப்படையில் இந்தியப் பிரிவினைக் கொள்கையை முதன்முறையாக ஏற்றுக்
கொண்ட கிரிப்ஸ் முன்மொழிவை நிராகரித்ததன் காரணமாக, பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள்
கைது செய்யப்பட்டனர். இது அலைந்து திரிந்த முஸ்லிம்களை வளைத்து முஸ்லிம் லீக் தன்னை அவர்களின் குரலாக நிலைநிறுத்த வகை செய்தது. நாட்டின் பிரிவினையைக் கோருவதில் உறுதியாக இருந்த முஸ்லிம் மக்கள், இந்தப் பிரச்சினையில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட
முடிவு செய்தனர் முஸ்லிம் லீக் பிரிவினைக்கான கோரிக்கையை வலுவாகப் பரப்பத் தொடங்கியது.
‘சி.ஆர். ‘ஃபார்முலா’ என்று அழைக்கப்பட்ட ராஜாஜி (சி. ராஜகோபாலாச்சாரி) தயாரித்த திட்டம் நடைமுறையில் தேசப் பிரிவினையை ஏற்றுக்கொண்டது. இது மிகவும் ஆபத்தானது, மிகவும் கவலைக்குரியது என்பது சியாமா பிரசாத் கருத்து. தேசப் பிரிவினைக்கு எதிராக அவர் நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்கினார். பிரிட்டிஷ் அரசின் கேபினட் மிஷன் முன்பு அவர் நாட்டின் பிரிவினைக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கையில் இந்தியாவில் வாழ விருப்பமில்லாத எந்த தரப்பையும் கட்டாயப்படுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் செயற்குழு தன் தீர்மானத்தை முன் வைத்ததை அறிந்து அவர் ஆச்சரியப்பட்டார். பிரிவினையை காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது என்று சர்தார் படேல் உறுதியளித்ததால் தான் 1946 தேர்தலில் முகர்ஜி காங்கிரஸை ஆதரித்தார். முஸ்லிம் மாகாணங்கள் இந்தியாவில் இருந்து பிரிந்து செல்லும் உரிமையை காங்கிரஸ் செயற்குழு ஏற்கனவே ஏற்றுக்கொண்டது என்பது அவருக்கு அதுவரை தெரியாது.
அதன்பிறகு, முகர்ஜி தேச நலன்களைப் பாதுகாக்க தனது முழு பலத்தையும் பயன்படுத்தினார். அவருக்கு வங்காள ஹிந்துக்களின் முழு ஆதரவு கிடைத்தது. சில பகுதிகளில் எதிர்ப்பு இருந்தபோதிலும், பாகிஸ்தான் கோரிக்கை ஏற்கப்பட்டதால், வங்காளப் பிரிவினை கோரிக்கை மிகவும் வலுப்பெற்றது, பிரிட்டிஷ் அரசு, காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகியவை அதை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அவரது முயற்சியால், பஞ்சாபின் பாதியும், வங்காளத்தின் பாதியும் பாரத்திற்குக் கிடைத்தது. “காங்கிரஸ் இந்தியாவைப் பிரித்தது, நான் பாகிஸ்தானைப் பிரித்தேன்” என்ற முகர்ஜியின் கூற்று அவரது பளீர் பதிலடியாக அமைந்தது.
மத்திய அமைச்சராக
மத்திய அமைச்சராக சித்தரஞ்சன் ரயில் என்ஜின் தொழிற்சாலை, சிந்திரி உரக் கழகம், ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்சாலை ஆகிய மூன்று மாபெரும் தொழில் நிறுவனங்களை நாட்டில் நிறுவி நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார் முகர்ஜி. அவர் ஒவ்வொரு திட்டத்தையும் அதன் பயன் ஆராய்ந்து, பொது நலனுக்கான நடைமுறைப்படியே மதிப்பிட்டார், இது சம்பந்தமாக அவர் எந்தக் குறுக்கீட்டுக்கும் மதிப்பளிக்கவில்லை.
கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த ஹிந்துக்களுக்கு பாகிஸ்தானில் எஞ்சியிருக்கும் நிலத்துக்கு சமமான நிலத்தை பாகிஸ்தானிடம் கேட்டு, போதிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்ற சர்தார் படேலின் கோரிக்கையை பண்டித நேரு ஏற்கவில்லை. கிழக்கு பாகிஸ்தானில் இருந்து பாரதம் வந்த ஹிந்துக்களுக்கு பாகிஸ்தானில் விட்டு வந்த நிலத்துக்கு சமமான நிலம் பாகிஸ்தானிடம் இருந்து பெற வேண்டும், அகதிகளுக்கு பாகிஸ்தானில் இழந்த சொத்துக்களுக்குப் பதிலாக திருப்திகரமான இழப்பீடு வழங்க வேண்டும் என்ற படேல் கோரிக்கையையும் நேரு ஏற்கவில்லை என்பதை முகர்ஜி கண்டறிந்ததை அடுத்து அவருக்கும் நேருவுக்கும் வேறுபாடுகள் அதிகரித்தன. 1950ல் நேரு-லியாகத் ஒப்பந்தத்தின் மூலம் உச்சத்தை எட்டின. ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதைத் தடுக்க முடியாமல், அமைச்சரவையில் இருந்து முகர்ஜி ராஜினாமா செய்தார். நேருவின் கொள்கைகளுக்கு எதிராக அரசாங்கத்திற்கு வெளியே இருந்தபடி எதிர்ப்பு உருவாக ஏற்பாடு செய்தார். இதற்கு பலன் கிடைத்தது: நேரு-லியாகத் ஒப்பந்தத்தின் அசல் வரைவில், சட்டமன்றங்களிலும் பணிகளிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தர வகை செய்யப்
பட்டிருந்தது: அதைத் திருத்தி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.