நடிகர் சித்தார்த், சமீபத்தில் பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நேவால் குறித்து தனது கேவலமான டுவீட் மூலம் சர்ச்சை கருத்தை வெளியிட்டார். அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த்து. தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த்தின் கணக்கை உடனடியாக முடக்க டுவிட்டர் இந்தியாவை வலியுறுத்தியது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மகாராஷ்டிரா காவல்துறைக்கு கடிதம் எழுதியது. இதனையடுத்து வேறுவழியின்றி அரைகுறையாக மன்னிப்பு கேட்டார் சித்தார்த். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஹிந்து ஜன சக்தி அமைப்பு அளித்த புகாரின் பேரில் சித்தார்த் மீது ஹைதராபாத் காவல் நிலையமும், சைபர் கிரைம் நகர காவல்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளன. பால்கர் சாதுக்கள் கொல்லப்பட்ட வழக்கில் நீதி வழங்கக் கோரி போராடி வரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஷஷாங்க் சேகர் ஜா, இத்தகவலை வெளியிட்டார்.