சாம்சங் தொழிற்சாலையை விரட்டியடிக்க துடிக்கும் கம்யூனிஸ்ட்டுகள்; மெளனத்தில் ஸ்டாலின்

தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சாம்சங் போன்ற பன்னாட்டு தொழிற்சாலை
களை தன் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளை விட்டு விரட்டிக்கொண்டு இருக்கும் திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும் தான் அமெரிக்கா, அண்டார்ட்டிக்கா போன்ற பகுதிகளுக்கெல்லாம் சென்று நமக்கு தொழில் முதலீடுகளை கொண்டு வர போகிறார்களாம். இது ‘கேக்குறவன் கேனையா இருந்தா கேப்பையில் நெய் வடியும்’ என்ற பழமொழி போல் உள்ளது.

பல ஆயிரம் தமிழர்களுக்கு வேலை கொடுத்து வரும் சாம்சங் நிறுவனம் தனது ஆலையை குஜராத்,  உத்திர பிரதேசம் அல்லது ஆந்திரா போன்ற ஏதேனும் ஒரு மாநிலத்துக்கு மாற்றுவது குறித்து யோசித்து வருகிறார்கள் என நியூஸ் 18 தொலைக்காட்சி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

“ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்.” என்ற பழமொழிக்கு ஏற்றது போல் கம்யூனிஸ்ட் கட்சிகள் புகுந்த எந்த இடமும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னெடுக்கும் இதுபோன்ற அர்த்தமற்ற போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்காமல், கூட்டணியில் இருக்கிறார்களே என்ற தயவை பார்த்து தமிழகத்தின் நலனை காவு கொடுக்க முடிவெடுத்து விட்டாரா முதல்வர் ஸ்டாலின்?

மேற்கு வங்கத்தில் டாடா கார் தொழிற்சாலையை விரட்டியதில் இருந்து கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு எந்த தொழிற்சாலையும் முதலீடு செய்ய தயங்குகிறது என்பதை முதல்வர் உணர வேண்டும். தமிழகத்தை இன்னொரு மேற்கு வங்கமாக மாற்றாமல் இருக்க கூட்டணி சமரசங்களை விடுத்து விட்டு கடுமையாக செயல்பட வேண்டும் முதல்வர்.

==========

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் 1 மாதத்திற்கும் மேலாக ஊழியர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதை முன்னின்று நடத்துவது கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு. சங்கம்.  2010-ல் இதே ஸ்ரீபெரும்புதூரில் பெரியளவில் போராட்டத்தை சி.ஐ.டி.யு. பாக்ஸ்கான் நிறுவனத்தில் நடத்தியது, இந்நிறுவனம் தைவான் நிறுவனமாகும்.  விஷயம் நீதிமன்றத்திற்கு சென்றது,  2017-ல் சீன நிறுவனமான சியோமி, பாக்ஸ்கான் நிறுவனத்துடன் உற்பத்தி ஒப்பந்தம் போட்டது, அத்துடன் சிஐடியு காணாமல் போனது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களை தூண்டி விட்டன, நிறுவனமும் மூடப்பட்டு விட்டது. அதுவரை தாமிர உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் இருந்த பாரதம், தனது இடத்தை இழந்தது. சீனாவில் இருந்து தாமிரம் வாங்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டது. பின் குஜராத் அரசு ஸ்டெர்லைட் ஆலையை வரவேற்று தொழிற்சாலை துவங்கப்பட்டுவிட்டது. தற்போது கொரிய நிறுவனமான சாம்சங் தொழிற்சாலையில் தனது கைவரிசையை சீனாவின் அடிவருடிகளாக உள்ள கம்யுனிஸ்ட்கள் துவக்கியுள்ளார்கள்.  தொழிலாளர்கள் நலன் என்பது முகமூடி மட்டுமே.

சீன செல்போன்களுக்கு முன்பு பாரதத்தில் சந்தை இருந்தது.  மட்டமான சரக்கு என்றாலும் குப்பை விலைக்கு கொடுத்ததால்,  மக்கள் வாங்கினார்கள். இப்போது தரமான செல்போன்களை குறைந்த விலையில் சாம்சங் கொடுக்கிறது. எனவே சீன பொருட்கள் மீது மோகம் குறைந்து விட்டது. மீண்டும் சீன  நிறுவனங்களை தூக்கி நிறுத்த, கம்யூனிஸ்ட்கள் முயற்சிக்கிறார்களோ
என்ற  எண்ணம் ஏற்படுகிறது. அதற்கு காரணம் கம்யூனிஸ்ட்கள் வ.ரலாறு அப்படி. ஏற்கனவே நோக்கியா நிறுவனத்திற்கு எதிராக இதே மாதிரி போராட்டத்தை நடத்தி  நோக்கியா தன் தொழிற்சாலையையே முடிவிட்டது என்பது குறிப்பித்தக்கது