ஆடி, புரட்டாசி அமாவாசைகள் ஹிந்துக்களுக்கு வி-சேஷம். அதிலும் புரட்டாசி மகாளய அமாவாசையில் பித்ரு தர்ப்பணம் செய்வது வருடம் முழுவதும் செய்த பலனைத் தரும். செய்யாவிட்டால் பித்ரு சாபத்திற்கு ஆளாவோம் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை ஏளனப்படுத்தியுள்ளது தமிழக அரசு. கொரோனாவை காரணம் காட்டி ஹிந்து புனித தலங்களில் மகாளய தர்பணத்துக்கு அனுமதி இல்லை என கடைசி நிமிடத்தில் அறிவித்துள்ளது அறநிலையத்துறை. நேற்று வழக்கம் போல தர்ப்பணம் தர வந்தவர்கள் சிரமப்பட்டனர். சில இடங்களில் ஏதோ போராட்டம் செய்ய வந்தவர்களை போல தடியடி நடத்தி விரட்டியது காவல்துறை. தெருமுனை, நடைபாதை, திண்ணைகள் என தர்ப்பணம் செய்ய புரோகிதர்களும் மக்களும் தவித்த தவிப்பு சொல்லிமாளாது. டாஸ்மாக்கில் சமூக விலகலை கடைபிடிக்க தட்டிகள் கட்டி, போலீசாரை காவல் வைத்து அதில் பிழைப்பு நடத்துகிறது அதிமுக அரசு. முகரம், தூத்துக்குடி பேராலய திருவிழா நடக்கும்போது கண்ணை மூடிக்கொள்கிறது. ஆனால் ஹிந்துக்களின் நம்பிக்கைகளை மட்டும் கிள்ளுக் கீரையாக பார்க்கிறது. கோயிலுக்கு கோடி கோடியாக ஹிந்துக்கள் கொடுத்த பணத்தை கொண்டு தட்டிகள் கட்டி, காவல் போட்டு சமூக விலகலுடன் மகாளய தர்ப்பணத்தை ஏன் நடத்தவில்லை அரசு? நடத்த விருப்பம் இல்லை எனில் ஹிந்துக்களின் கோயில்களில் அரசுக்கு என்ன வேலை?
தர்ப்பணம் செய்யமுடியாத ஹிந்துக்கள்ன் கோபமும், பித்ரு சாபமும் அடுத்த தேர்தலில் எதிரொலிக்க வேண்டும் அதில் கழகங்கள் எல்லாம் சாம்பலாக வேண்டும்.