சர்வதேச விண்வெளி நிலையம் என் வீடு: சுனிதா வில்லியம்ஸ்

 

நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

நாசாவின் புகழ்பெற்ற, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58). இவர் நாசாவின் போயிங்கின் ஸ்டார்லைனர் திட்டத்தில் க்ரூ ப்ளைட் டெஸ்ட் மிஷனின் பைலட்டாக பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில் இந்த ராக்கெட்டை புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் போர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதளம் 41ல் இருந்து இந்திய நேரப்படி மே 7ம் தேதி காலை 8.04 மணிக்கு ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணி சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார். சுனிதா வில்லியம்ஸ் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். இந்நிலையில், ‛‛ நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும். புதிய விண்கலத்தில் பறப்பது குறித்து எந்த அச்சமும் இல்லை” என சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.