சர்வதேச குலு தசரா திருவிழா

ஹிமாச்சல பிரதேசம் குலுவானில் உள்ள ரத் மைதானத்தில் நடந்த சர்வதேச குலு தசரா திருவிழாவில் சுமார் 8,000 பெண்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்துகொண்டு நாட்டுப்புற நடனம் ஆடினர். இது காண்போர் மனங்களை கொள்ளைகொண்டது. சர்வதேச குலு தசரா திருவிழாவின் மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமையன்று இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இவ்விழா அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரந்த், முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் ஆகியோர் ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் உள்ள தால்பூர் மைதானத்தில் இந்த சர்வதேச குலு தசராவின் தொடக்க ரத யாத்திரையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற இந்த குலு தசரா விழா அப்பகுதி மக்களால் விஜயதசமியைத் தொடர்ந்து ஏழு நாட்கள் முழு உற்சாகத்துடன்  கொண்டாடப்படுகிறது.