சமஸ்கிருதத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவியல் ஆவணப்படமான ‘யானம்’ பாரதத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (எம்.ஓஎ.ம்) என்ற ‘மங்கள்யான்’ வெற்றிக் கதையையொட்டி எடுக்கப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணனின் “My Odyssey: Memoirs of the Man Behind the Mangalyaan Mission” என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு ‘யானம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம், ஆகஸ்ட் 21ம் தேதி சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் திரையிடப்படும். உலக சினிமா வரலாற்றில் முதல் அறிவியல் சமஸ்கிருதத் திரைப்படம் இது. இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் சென்னையில் நடைபெறவுள்ள ஒரு விழாவில் இதன் பிரீமியரை தொடங்கிவைப்பார். இதில் விண்வெளி ஏஜென்சியின் முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் மற்றும் தற்போதைய வி.எஸ்.எஸ்.சி இயக்குனர் எஸ். உன்னிகிருஷ்ணன் நாயர், தென்னிந்திய திரைப்பட துறையின் செயலாளர் ரவி கொட்டாரக்கார ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள் என்று ஆவணப்படத்தை இயக்கிய தேசிய விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் வினோத் மங்காரா தெரிவித்தார்.