தரமில்லாமல் அடிக்கடி சீன தளவாடங்களால் பாகிஸ்தான், வங்கதேசம், உள்ளிட்ட பல நாடுகள் கலக்கத்தில் உள்ளன. 1970 காலத்து இரு மிக் ரக டைப் 035G நீர்மூழ்கிகளை 200 மில்லியன் டாலர் செலவில் சீனாவிடம் இருந்து வங்கதேசம் வாங்கி 2017ல் படையில் இணைத்தது. தற்போது பிரச்சனைகள் காரணமாக இரு நீர்மூழ்கிகளும் கரையில் நிற்கின்றன. இதில் பாடம் கற்காத வங்கதேசம் சமீபத்தில் வாங்கிய இரு சீன 053H3 பிரைகேட் கப்பல்களிலும் நேவிசேஷன், ரேடார், துப்பாக்கிகள் பழுதாகி உள்ளதால் தலையை பிய்த்துக் கொண்டுள்ளது. மியான்மர் நாடும் சீனாவிடம் இருந்து வாங்கிய தளவாடங்களின் தரத்தை பற்றி மகிழ்சியின்மையை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் தற்போது பாரதத்திடம் இருந்து ஒரு நீர்மூழ்கியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேபாளமும் இதற்கு விதிவிலக்கல்ல. சீனாவிடம் இருந்து தனது விமான நிறுவனத்திற்காக வாங்கிய ஆறு Y12e மற்றும் MA60 விமானங்கள் தற்போது செயல்படாமல் தூங்குகின்றன. கென்யா சீனத் தயாரிப்பு VN-4 ஆயுத கவச வாகனங்களை வாங்கியது. இதில் விஷேஷம் என்னவென்றால், சுடும் சோதையின் போது சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் கூட வாகனங்களில் அமர்ந்து கொள்ள மறுத்துவிட்டனர் என்பதுதான். இந்த வாகனங்களில் ஏற்பட்ட விபத்துகளில் சில வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அல்ஜீரியா சீனாவிடம் இருந்து வாங்கிய CH-4B UCAV ஆளில்லா விமானங்களும் விபத்தை சந்தித்துள்ளன. பாகிஸ்தானுக்கு சீனா விற்ற F22P பிரைகேட் கப்பல், ஒன்பது LY-80 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளில் மூன்று என பல தளவாடங்களும் பழுதடைந்துள்ளன.