சத்திரபதி சிவாஜி மஹாராஜாவை அவரது அபார ஆற்றல்களுக்காக பாரதம் மட்டுமல்லாமல் வியாட்னா
மிலும் கொண்டாடி வருகிறார்கள். வியாட்னாம் தேசத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற மேடம் பின் ஒருமுறை டெல்லி வந்திருந்தபோது, சிவாஜி மஹாராஜாவின் சிலை எங்கிருக்கிறது. அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அப்போதிருந்த காங்கிரஸ் அரசில் பலரும் விஷயம் புரியாமல் விழித்தார்கள். மேடம் பின் விளக்கினார், “வியட்னாமில் நாங்கள் சொந்த ஆட்சியை நிலைநாட்டுவதற்காக போராடிக்
கொண்டிருந்த போது சிவாஜி மஹாராஜாவின் கொரில்லா போர் முறை எங்களுக்கு ஊக்கமளித்து வெற்றி தந்தது” என்றார்.
பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் வெற்றிகள் பலருக்கும் ஊக்கம் அளித்தன. இன்றைய மத்திய பிரதேசத்தின் பகுதியான புந்தேல்
கண்ட் இளவரசன் சத்ரசால், சிவாஜியின் வெற்றியால் ஊக்கம் பெற்று அன்னிய முகலாய ஆதிக்கத்திற்கு எதிராக போர்கொடி உயர்த்தினான். இன்னும் சிறிய அளவில் பாலாஜி என்பவர், ‘எனது கையெழுத்து மிக நன்றாக இருக்கும். இது ஒன்றுதான் என்னிடம் உள்ள திறமை. இதை சிவாஜி மஹாராஜாவின் ஹிந்து சுயராஜ்ய பணிக்காக நான் அர்ப்பணிக்கிறேன்’ என்று வாழ்நாள் முழுவதும் சிவாஜியின் பணியில் சமர்ப்பணம் ஆனார். அதுமட்டுமல்ல, அவரது மகன் கண்டோஜி பல்லாள் கூட சிவாஜியின் மைந்தர் காலத்தில் மெய்க்காப்பாளனாக பணிபுரிந்தான்.
சிவாஜி தன் காலத்தில் பேயாட்டம் போட்டுவந்த முஸ்லிம் தர்பார்களை கண்ணில் விரலைவிட்டு ஆட்டியது பெரிய விஷயம் அல்ல. வெளிநாடுகளிலிருந்து நாடுபிடிக்கும் நோக்கத்தோடு வந்திருந்த ஐரோப்பியர்களையும் தனக்கு சலாம் போட வைத்தார். அப்படி இருந்தது அவரது வியூகம். கடல் நடுவே கோட்டை கட்டச் சொன்னார். அப்படித்தான் சிந்து துர்கம் உருவானது, கடல் கொள்ளையர்களை, அதாவது ஐரோப்பியர்களை வாலாட்ட விடாமல் தடுத்தது.
இவ்வளவெல்லாம் கொடிகட்டி பறப்பதற்கு முன்னால் அதாவது, சிவாஜி அத்தியாயம் தேசிய வாழ்வில் துவங்குவதற்கு முன்னால் நாடு எப்படி இருந்தது? என்றால் ஒரு ஹிந்து வீட்டை விட்டு வெளியே போனால் உயிரோடு திரும்புவதற்கு உத்தர
வாதம் இல்லாமல் இருந்தது. ஹிந்து பெண்களைப் பற்றி கூறவே தேவையில்லை. அவர்களின் கற்புக்கு பாதுகாப்பே இல்லாமல் இருந்தது. பசுக்கள் பகிரங்கமாக வெட்டப்பட்டன. ஹிந்து கோயில்கள் முகலாய அரசாங்கத்தின் கட்டளைப் படி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு வந்தன. முஸ்லிம் ஆட்சி நடப்பதால்தானே இப்படி யெல்லாம் அக்கிரமம் நடக்கிறது? அரியணை
யில் ஹிந்து அரசன் இருந்தால் எப்படி இருக்கும்? இதை சராசரி ஹிந்துக்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.
ஆனால், சிவாஜி அடுக்கடுக்காக வெற்றி களைக் குவித்தார். ஹிந்து அரியணை அமைத்தார். ‘சத்ரபதி’, ‘மஹாராஜா’ என்று அடைமொழிகளோடு முடிசூட்டிக்கொண்டு சிம்மாசனம் அமர்ந்தார். ஹிந்து சமுதாயமே தன்னம்பிக்கையோடு தலை நிமிர்ந்தது. இருண்ட ஒரு காலகட்டத்தில் இவ்வாறு ஹிந்து சக்திக்கு ஊற்றுக்கண்ணாக ஒரு ஹிந்து சாம்ராஜ்யம் நிறுவியதுதான் சிவாஜியின் வாழ்க்கைப் பணி.
எனவேதான் 1925 ஆர்.எஸ்.எஸ்ஸை நிறுவிய டாக்டர் ஹெட்கேவார் சிவாஜி ஜெயந்தியை கொண்டாடுவதற்கு பதிலாக, சிவாஜி மஹாராஜாவாக முடிசூட்டிக்கொண்ட விழாவை நாடு முழுவதும் சங்க ஷாகாக்களில் கொண்டாடும் மரபை துவக்கினார். சிவாஜி வாழ்ந்த காலத்தில் உதயமான ஹிந்து அரியணை மக்களுக்கெல்லாம் ஊக்கம் தந்தது போல, 90 ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளையனின் விபரீத ஆட்சிக்கு உட்பட்டு ஹிந்துத்துவத்தின் மேன்மைகளை மறந்து அடிமைத்தனத்தில் சிக்கியிருந்த மக்கள், ஊக்கம் பெற வேண்டும் என்பதுதான் டாக்டர் ஹெட்கேவாரின் நோக்கம்.
சத்ரபதி சிவாஜி முடிசூட்டியதன் 3௫0வது ஆண்டு துவக்க விழாவை தமிழகம் உட்பட பாரத நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் கொண்டாடினார்கள். இதன் மூலம் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் வாழ்க்கையில் ஹிந்து ஸ்வராஜ்யம் மட்டுமே மையமான பணியாக அமைந்தது என்பதை விரிவான அளவில் பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.