‘ஹிந்த் மஸ்தூர் கிஸான் சமித்’ அமைப்பை சேர்ந்த உத்தரபிரதேச விவசாயிகள் 2,000 பேர் டெல்லிக்கு 300க்கும் மேற்பட்ட டிராக்டரில் சென்றனர். இவர்கள், மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து பேசினர். அப்போது விவசாய சட்டத்திற்கு தங்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினர். பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த இவர்கள், மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு மிகவும் ஆதரவானது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பஞ்சாப் ஏஜெண்டுகள் இரண்டு வருடங்கள் டெல்லியில் தங்கி போராடப் போவதாக அரசை மிரட்டுகின்றனர். இது தவறானது. தேவைப்பட்டால் ஐந்து வருடங்கள் நாங்கள் இங்கேயே தங்கி அரசுக்கு ஆதரவாக போராடத் தயார். அதற்காகவே எங்கள் டிராக்டர்களுடன் இங்கு வந்துள்ளோம் என கூறினர்.