கோயில் நிலம் தாரைவார்ப்பு

வடபழனி கோயில் நிலத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுற்று சுவர் அமைக்கப்பட்டபோது, அங்கு உள்ள மசூதிக்கு செல்ல தங்களுக்கு 20×80 அடி பாதை வேண்டும் என்று கேட்டு வற்புறுத்தியுள்ளனர் அப்பகுதி முஸ்லிம்கள். ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதற்கு மறுப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து, முஸ்லிம்கள், விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவான பிரபாகர் ராஜாவுக்கு தகவல் சொல்லி வரவழைத்தனர். அவர்மூலம் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை எம்.எல்.ஏவும் முஸ்லிம்களும் ஏற்கவில்லை, மேலும் மசூதி ஒலி பெருக்கி மூலம் செய்தி சொல்லி 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை அந்த இடத்துக்கு வரவழைத்து அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர். அந்த சமயத்தில், விருகை தொகுதி எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர், அமைச்சர் ஆகியோரிடம் பேசி இதற்கு ஒப்புதலும் பெற்றுள்ளார். இதனையடுத்து மசூதிக்கு வழி விட்டு சுற்று சுவர் அமைக்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஹிந்து முன்னணியினர், ‘தி.மு.க ஆட்சியில், ஹிந்துக்களின் நூற்றாண்டு கால ஆலயங்கள் இடிக்கப்படுகிறது. கோயில் சொத்தை கொடுக்க சொல்லி தி.மு.க எம்.எல்.ஏ, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரியை கட்டாயபடுத்துகிறார். கோயில் நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என வீராப்பாகக் கூறிய தி.மு.க அமைச்சர் சேகர் பாபு, கோயில் நிலத்தை விட்டுக்கொடுக்கிறார். முஸ்லிம்கள் என்றவுடன்  அரசு அதிகாரிகளை கூட்டம் சேர்ந்து முஸ்லிம்கள் அச்சமூட்டுகின்றனர். ஆனால் வழக்கு இல்லை, கைது இல்லை. ஹிந்துக்கள் தங்கள் அடிப்படை உரிமைக்காக போராடினாலே கைது நடவடிக்கைகள் எடுக்கும் அரசும் காவல்துறையும், முஸ்லிம்கள் என்றால் மட்டும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. கோயில் இடத்தை விட்டுக் கொடுத்ததற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிக்கிறது. மேலும், விட்டுக்கொடுக்கப்பட்ட இடத்தையும் சேர்த்து தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளனர்.