‘உத்தரபிரதேசம், பில்ஸி டவுனில் சமீர் என்ற இறந்த ஒருவரின் உடலை கோயிலின் அருகாமையில் உள்ள நிலத்தில் புதைக்க அவரது குடும்பத்தினர் முயற்சித்தனர். இதற்கு அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அந்த குடும்பத்தினர் இது எங்களுக்கு சொந்தமான தனியார் நிலம் என கூறி வாக்குவாதம் செய்தனர். காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் உடனடியாக அங்கு வந்து இது குறித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நிலம் கோயிலுக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனால் அவர்களின் இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.