சன்யாசிகள் துறவிகள் கலந்துகொள்ளும் பிரயாக்ராஜ் மகா மேளா 2022ல் கலந்துகொண்ட அகில பாரதிய தண்டி சுவாமி பரிஷத் அமைப்பின் தலைவர் சுவாமி பிரம்மாஷ்ரம் மகராஜ், மற்றும் பிற ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த துறவிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தேசத்தில் உள்ள கோயில்கள் மற்றும் ஹிந்து மடங்களை அரசுகளின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். கிறிஸ்தவர்களின் சர்ச்சுகள், முஸ்லிம்களின் மசூதிகள் மீது அரசுக்கு அதிகாரம் இல்லாதபோது, ஹிந்து கோயில்கள் மற்றும் மடங்கள் மீது ஏன் கட்டுப்பாட்டை செலுத்த வேண்டும்? சனாதன தர்ம மரபுப்படி, ஆசிரமங்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை கோவில்களும் மடங்களும்தான் நடத்த வேண்டும். தேசத்தின் முக்கிய துறவிகள், தேசம் முழுவதும் உள்ள ஹிந்து கோயில்கள், மடங்களை அரசாங்க கொடுங்கோன்மைப் பிடியிலிருந்து விடுவிக்கும் முயற்சிக்கு தலைமை தாங்குவார்கள். கோயில்கள் மற்றும் மடங்களின் அன்றாட நடவடிக்கைகள், மத விழாக்கள், நடைமுறைகள் அனைத்தும் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும்’ என்று கூறினார்.