ஆந்திரா, விஜயவாடாவில் அமைந்துள்ள விஜயேஸ்வர சுவாமி கோயில் மிகப் பழமை வாய்ந்தது. இது துவாபர யுகத்தைச் சேர்ந்தது, இக்கோயில் மூலவரை பஞ்ச பாண்டவர்களுள் ஒருவரான அர்ஜூனனே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். இந்தக் கோயில் ஹிந்து அறநிலையத் துறையின் கீழ் பெயரளவிலேயே உள்ளது. ஆனால், இதன் நிர்வாகம் முழுவதும் அமைச்சர் வெல்லம்பள்ளி ஸ்ரீனிவாசனுடைய குடும்பத்தினரின் கையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால், அதனை வைத்து சம்பாதிக்க, கோயிலின் பெயரில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்ட அமைச்சர் முடிவெடுத்துள்ளார். இதற்காக கோயில்களைப் பராமரிக்க ஒதுக்கப்பட்ட அறநிலையத்துறை நிதியிலிருந்து ரூ. 1.30 கோடி நிதியை முறைகேடாக தனது குடும்பத்தார் நிர்வகிக்கும் அறக்கட்டளை மூலம் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்ட முயல்கிறார். கோயிலை சுற்றியுள்ள நிலங்கள் தொல்லியல் ஆய்வுத்துறையில் உள்ளதையும் இந்த ஷாப்பிங் காம்ப்ளெக்ஸை காரணம் காட்டி அபகரிக்க முயற்சிக்கிறார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.