பாரதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற பல நாடுகள் வரிசையில் காத்திருக்கின்றன. அண்டை நாடுகள் நலத்திட்ட உதவியின் கீழ் முதல் கட்டமாக பூடான், மியான்மர், மாலத்தீவு, வங்க தேசம், நேபாளம், செஷல்ஸ் ஆகிய ஆறு நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும். இது படிப்படியாக நட்பு நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, பாரத் பயோடெக் தயாரித்துள்ள, மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் முதல்கட்ட பரிசோதனைக்கு மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது.