கொடுப்போம், பெறுவோம்! பயன்படுவோம், பயனடைவோம்!

ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி சென்னையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஹெச்.எஸ்.எஸ். ரத்ததானிகள் மொபைல் அப்பிளிகேஷன் ‘ஆப்’ அறிமுக நிகழ்ச்சியில் அனைத்து இந்திய ஹஜ் சங்கத் தலைவர் எஸ்.சி.எஸ்.வி.எம்.வி. அபுபக்கர் தலைமை ஏற்க திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் குடும்பத்தினரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தமிழக மாநிலப் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டார்கள்.

ஏனாத்தூர் சங்கரா பல்கலை கழக மாணவர்கள் நாராயணன், ராம் சனத்குமார் இணைந்து தயாரித்த மொபைல் அப்ளிகேஷனை பாக்யராஜ் குடும்பத்தினர் அறிமுகம் செய்து வைத்தனர்.

அபுபக்கர்

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு மற்றொரு பெயர் ‘ரெஸ்ட்லெஸ் சோசியல் சர்விஸ்’ இப்பொழுது இருக்கும் மத்திய அரசு ஹஜ் பயணம் செய்யும் மக்கள் அனைவருக்கும் சாப்பாடு, தண்ணீர் மட்டுமின்றி அவர்கள் மெக்கா சென்று வர அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. நமது அரசு மெக்காவில் ஒரு பெரிய கட்டிடத்தை எடுத்து அதில் நம் நாட்டு கொடியை பறக்கவிட்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். சேவை மனப்பான்மையுடன் எப்போதும் செயல்பட்டு வருகிறது.”

பாக்கியராஜ்

ரத்தம் என்பது அவ்வளவு எளிதாக கிடைக்கும் விஷயம் இல்லை. யாருக்கு வேண்டும்? எப்பொழுது வேண்டும்? யார் ரத்ததானம் செய்யப்போகிறார்கள்? யாருக்கு என்ன ரத்தம் தேவை என்பதெல்லாம் தெரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இந்த அப்பிளிகேஷன் மூலமாக அனைத்தையும் எளிதாகி விட்டனர் இந்த இளைஞர்கள். இங்கு மட்டுமின்றி பாரத நாடு முழுவதும் இது சென்று அடைய வேண்டும்”

பூர்ணிமா பாக்யராஜ்

நான் படிக்கும் காலத்தில் ரத்த தானத்தைப் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இப்போ இப்படி ஒரு மொபைல் அப்ளிகேஷன் மூலம் அனைவருக்கும் எளிதாக ரத்தம் கிடைக்கும் வகையில் செய்திருக்கின்றனர்.

சாந்தனு

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடர்ந்து சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2015ம் ஆண்டு வெள்ளம் வந்த சமயத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் முதல் மாடி வரையில் தண்ணீர் இருந்தது. அப்போது நாங்கள் அங்கு சென்ற சமயத்தில் இதற்கு முன்பு இங்கு யாருமே வரவில்லையா என்று கேட்டதிற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த மக்கள் மட்டுமே வந்தனர்” என்று கூறினார்கள்.”

ராம. ராஜசேகர்

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இதுவரை செய்த 1,50,000 சேவை காரியங்களில் ஒன்றுதான் இந்த ரத்ததான மொபைல் அப்ளிக்கேஷன். அறிமுக நிகழ்ச்சி – அரக்கோணம் ரயில் நிலையம் பக்கத்தில் டீ கடை வைத்திருக்கும் ராம் என்பவர் அந்தப் பக்கம் எப்பொழுது ஆம்புலன்ஸ் சென்றாலும் அவர் கடையில் உள்ள முருகன் படம் முன்பாக நின்று அந்த ஆம்புலன்ஸில் செல்பவர் குணமாக வேண்டும். என்று வேண்டிக்கொள்வார். இவ்வாறு நிறைய பேர் அவரவர் சக்திக்கு ஏற்ப நிறைய சேவை காரியங்கள் செய்கின்றனர். அவர்களுக்கெல்லாம் ஊக்கமளிப்பது ஆர்.எஸ்.எஸ். சாதாரண மனிதர்களில் இருந்து மிக உயர்ந்த மனிதர்கள் வரை அனைவருக்கும் இந்த தேசம் முக்கியம். இந்த மக்கள்  முக்கியம். இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் என்னுடைய சகோதரர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது ஆர்.எஸ்.எஸ். இதற்கு விளம்பரம் தேவை இல்லை, நன்கொடை தேவை இல்லை. ஆனால் சேவை மனப்பான்மை கொண்ட மனிதர்கள் தேவை”.

 

 

One thought on “கொடுப்போம், பெறுவோம்! பயன்படுவோம், பயனடைவோம்!

  1. வாழ்க பாரதம். வெல்க தமிழகம்
    வாழ்வோம் வளர்வோம் உயர்வோம்
    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய
    ஓம் ஓம் ஓம்

Comments are closed.