கேரள மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களின் உச்ச அமைப்பான கேரள கத்தோலிக் பிஷப் கௌன்சில் (கே.சி.பி.சி) “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்தள்ளது. இதுகுறித்து கே.சி.பி.சி செய்தித் தொடர்பாளர் பாதர் ஜேக்கப் பாலக்கப்பிள்ளி கூறுகையில், “தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களின் கலை வேலைப்பாடாக மட்டுமே பார்க்க வேண்டும். இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு செய்த அட்டூழியங்களை இந்த படம் அம்பலப்படுத்தியுள்ளது. எனவே, இதனை வகுப்புவாதத்தின் அடிப்படையில் மதிப்பிட முடியாது. லவ் ஜிஹாத் வலையில் பெண்கள் சிக்கவைக்கப்பட்டு அவர்கள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கப்பட்ட உண்மைகளை யாராலும் மறுக்க முடியாது. ஏமாற்றி காதல் திருமணம் செய்யப்பட்டு அதன் பிறகு கட்டாய மதமாற்றம் செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்தார்.