ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: பஞ்சாப் உட்பட எந்த இடத்திற்கு கெஜ்ரிவால் பிரசாரத்திற்கு சென்றாலும், அவரை பார்க்கும் போது மதுபான ஊழல் தான் ஞாபகம் வரும். மக்கள், கெஜ்ரிவாலை பார்க்கும் போது, அவர் முன்னால் பெரிய ‘பாட்டில்’களையும் பார்ப்பார்கள். பிரசாரம் செய்ய கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததால், ‛இண்டியா ‘ கூட்டணி பலன் அடையும் என நான் கருதவில்லை.
தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது. மனுவை திருத்தி ஜாமின் கேட்டார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. பிரசாரம் செய்வதற்காக மட்டும் இடைக்கால ஜாமின் வழங்கியது. இது கெஜ்ரிவாலுக்கோ, ஆம் ஆத்மிக்கோ கிடைத்த வெற்றி அல்ல. இவ்வாறு அமித்ஷா கூறினார்.