‘கூ’ சமூக வலைதளத்தில் இணைந்த ஆர்.எஸ்.எஸ்

பாரத பேரரசின் புதிய தகவல் தொழில்நுட்ட சட்டவிதிகளை ஏற்க மறுத்து வரும் டுவிட்டர் தொடர்ந்து பாரத இறையாண்மைக்கும் அரசுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு, நீதிமன்றம், பொதுமக்கள் என பலரும் பலமுறை அதற்கு கண்டனம் தெரிவித்தும் அது மாறுவதாகத் தெரியவில்லை. இதையடுத்து பாரத தேசத்தவர்கள் பலரும், ‘கூ’ சமூக வலைதளத்தில் கணக்கு துவங்கி வருகின்றனர். மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் என அரசியல்வாதிகளும் அணில் கும்ப்ளே உள்ளிட்ட பிரபலங்களும் ‘கூ’ சமூக வலை தளத்தில்  கணக்குத் துவக்கியுள்ளனர். இந்நிலையில் ‘கூ’ சமூக வலைதளத்தில், ஆர்.எஸ்.எஸ் சார்பிலும் கணக்கு துவக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘தொண்டர்கள் மற்றும் மக்களை, பாரத மொழிகளில் தொடர்பு கொள்ளும் நோக்கில், ‘கூ’ சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ் இணைந்துள்ளது’ என தெரிவித்தார். இது குறித்து ‘கூ’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கூ சமூகவலைதளத்தில், 65 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்கள் இணைந்துள்ளனர். இப்போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இணைந்துள்ளதால், விரைவில் பயனாளர்கள் எண்ணிக்கை, ஒரு கோடியை தாண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.