காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித், ‘சன்ரைஸ் ஓவர் அயோத்யா; எங்கள் காலத்தில் தேசியம்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தில் ஹிந்துத்வாவின் அரசியல் பதிப்பும், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளும் ஒன்றே தான்’ என சர்ச்சைக்குரிய வகையில் கூறியுள்ளார். ஹிந்துத்துவா என்றால் என்னவென்றே தெரியாத முஸ்லிம் வெறியரான சல்மான் குர்ஷித் இப்படி எழுதியதற்கு தேசம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில், மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, ஹிந்துத்வாவை அவமானப்படுத்தி நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் பிளவு ஏற்படுத்த சல்மான் குர்ஷித் முயற்சிக்கிறார். பாரதத்தையும் ஹிந்து மதத்தையும் கேவலப்படுத்துவது காங்கிரசின் பிறவிக் குணம். காங்கிரஸ் எம்.பி., ராகுல், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், கேரளாவை சேர்ந்த சசிதரூர் உள்ளிட்ட காங்கிரசார் பலர், பாரதத்தையும், ஹிந்து மதத்தையும் அவமானப்படுத்துவதை வழக்கமாக வைத்து உள்ளனர். சல்மான் குர்ஷித் புத்தகத்துக்கு தடை விதிப்பது பற்றி சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. ஆலோசனை கிடைத்தபின், புத்தகத்துக்கு தடை விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும்’ என்று கூறினார்.