குரு நானக் – தோற்றுவித்த சீக்கியம் ஹிந்துக்களைக் காக்க உயர்ந்த வாள்கரம்

முகலாய கொடுங்கோன்மையும் ஹிந்துக்களுக்கிடையே நிலவிய சாதி வேற்றுமைகளுமாக சனாதன தர்மம் மங்கியிருந்த வேளையில், மீண்டும் புத்துணர்ச்சி ஊட்ட   ஐந்து நூற்றாண்டுகள் முன்பு இறைவன் அனுப்பி வைத்த சித்த புருஷர் தான் குரு நானக்.

பத்து சீக்கிய குருமார்

குரு நானக் வழியில் தோன்றிய ஏனைய ஒன்பது குருமார்களும் சிறிதும் பாதை விலகாமல் நம் மண்ணில் தோன்றிய மகான்களான கபீர்தாசர், ராமதாசர், துளசிதாசர், மீராபாய் போன்றோரின் அடியொற்றி ராமரையும், கிருஷ்ணரையும், துர்கையையும் போற்றுகின்றனர். குரு நானக்கின் சிஷ்ய பரம்பரையினர் பெயர்கள் அர்ஜுன்தேவ், ராமதாஸ், ஹர்கோவிந்த் என்று அனைத்தும் ஹிந்து பெயர்களே.

ஹிந்துக்கள் போல சீக்கியர்கள் கர்மா வையும் மறு பிறப்பையும் நம்புகிறார்கள். குருவின் மேன்மையை கொண்டாடுகிறார்கள். ஹிந்துக்கள் போல சீக்கியர்களும் இறந்தவர் உடலை எரியூட்டுகின்றனர்.

குரு நானக் அமைதி வழியையே உபதேசித்தார். ஆனால் முகலாய அரசர்கள் பின்னர் வந்த சீக்கிய குருமார்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றார்கள்.  சீக்கி யர்கள் தங்கள் சிஷ்யர்களை காப்பதற்கு வீரத்தின் பாதை சென்று சிறு சிறுபடைகளை ஏற்படுத்த வேண்டியதாயிற்று.

முகலாய பேரரசு அவர்கள் மீது ஏவிவிட்ட வன்முறை மிகக்கொடூரமானது (படங்கள்). குருமார்களின் தியாகமயமான வாழ்க்கை நெஞ்சை உருக்குவது. ஒன்பதாவது குருவான தேஜ்பகதூர் அறவழியில் நிற்பதற்கும் வீரமே துணை என்று எடுத்துரைத்தார். இறுதியில் அவுரங்கசேப்பால் சிறைபிடிக்கப்பட்டு  தலை துண்டிக்கப்பட்டு உயிர் இழந்தார்.

பத்தாவது குருவான குரு கோவிந்த் சிம்மனின் வாழ்க்கை ஓரு வீர காதை.பாரதி, சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர் போன்ற எண்ணற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் எழுச்சியூட்டிய லட்சிய வாழ்க்கை அவருடைய வாழ்க்கை.

அவர் காலமான பின்னர் அவருடைய இரு மகன்களான ஜொராவர் சிங், ஃபதே சிங் இருவரும் சிறைப்பிடிக்கப்பட்டு முஸ்லிம் ஆக மறுத்ததால் சுற்றுச்சுவர் எழுப்பி உயிருடன் கொன்றான் முகலாயன்.  அந்தத் தருணத்திலும் புன்னகை மாறா முகத்துடன் தர்மத்திற்காக பலிதானம் ஆனவர்கள் அந்த சிங்கக் குட்டிகள்.