வேற்றுமையில் ஒற்றுமை” இதுவே பாரத தேசத்தின் தனித்தன்மை. இதைக் கண்கூடாகக் காண வேண்டுமா? மஹா கும்பமேளா களம் தான் சிறந்த இடம். வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வேறு வேறு மொழி பேசுபவர்கள், வெவ்வேறு சம்பிரதாயத்தினர், வெவ்வேறு உணவுப் பழக்கம் கொண்டவர்கள் விதவித உடை அலங்காரமுடையவர்கள் அனைவரும் ஒன்றாகச் சங்கமிக்கும் இடம் தான் மஹா கும்பமேளா. இவர்கள் மட்டுமா பொதுமக்களிடையே அதிகம் காணப்படாத அகோரிகள், நாக சாதுக்கள் கூட கும்பமேளாவில் கலந்து
கொள்வார்கள். இந்த ஒற்றுமைக்குக் காரணம் நமக்குள்ளிருக்கும் பொதுவான சமய நம்பிக்கைகள்.
நம்பிக்கையே நடுநாயகம்
புண்ணிய நதிகளில் நீராடுவது அதிலொன்று. சனாதனம் பாவ – புண்ணியங்களுக்கும், முன்ஜன்ம வினைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் தந்துள்ள தர்மம். நம் பாவங்கள் தொலைய கங்கையில் நீராட வேண்டுமென்பது நமது நம்பிக்கை.
கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்று நதிகளும் கூடும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடக்கிறது. அப்போது அங்கே புனித நீராடுவது நமது பாவங்களைப்போக்கி அகத்தூய்மை அளிக்கும் என்பது ஆன்றோர்களின் திடமான நம்பிக்கை.
இன்று வரை நாமும் அதைப் பின்பற்றுகிறோம். அத்தகைய சிறப்புமிக்க கும்பமேளாவில் இணைய நாடெங்கிலுமிருந்து, இல்லை
யில்லை, வெளிநாட்டிலிருந்தும் கூட பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.
ஒரு சுவாரசியமான கதை….
ஒருமுறை அந்தணர் வேடம் தரித்து சிவனும், உடன் பார்வதியும் கங்கைக்கரைக்கு வருகின்றனர். சிவன் இறந்தது போல் கிடக்க உடலருகே அழுதுகொண்டிருந்த பார்வதி பாவமே செய்யாதவர் யாராவது தொட்டால் தன் கணவர் உயிர் திரும்பும் என்று சொல்லி புலம்புகிறாள். கூடியிருந்த மக்கள் தயங்க, ஒரேயொரு கொள்ளையன் முன்வந்து முழுநம்பிக்கையோடு பாவ நாசினியான கங்கையில் மூழ்கியெழுந்து இறந்த உடலைத் தொடுகிறான். சவம் சிவமாகி சக்தி சகிதம் காட்சி தந்து அவனை ஆட்கொண்டாராம். அதே நம்பிக்கையுடன் தான் இன்றும் மக்கள் பாவம் தொலைக்க அலைகடலெனத் திரள்கின்றனர்.
ஹைடெக் கவசம்
டிஜிட்டல் யுகத்தில் நடக்கும் மஹா கும்பமேளாவாயிற்றே! இதை ‘ஹைடெக் ‘ திருவிழா என்றால் மிகையில்லை. ஆம். பாதுகாப்பு நடவடிக்கைகள் பலமாகவே உள்ளன.
2700 AI தொழில்நுட்பக் கேமராக்கள்.
நுழைவாயில்களில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம்.
மேலிருந்து ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு.
சங்கமம் பகுதியைக் கண்காணிக்க நீருக்கடியில் நூறு மீட்டர் வரை பாயக்கூடிய ட்ரோன்கள்… இவை தவிர
கும்ப சஹாயா ஆப் (app)! இந்த ஆப் மூலம் வழிகள், கூட்டம் குறித்த தகவல், அவசர உதவி தகவல், தங்கும் விடுதி எல்லாம் தெரிந்துகொள்ளலாம்.
விரைவான தகவல் தொடர்புக்கு வயர்லெஸ் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. வைஃபை வசதிகளும் உண்டு.ஊருக்குள் சுலபமாகச் சுற்றிவர கூகுள் மேப்புடன் ஒருங்கிணைப்பும் உண்டு. அடேங்கப்பா!
குடிநீர் வழங்க 1,250 கிலோ மீட்டர் பைப்லைன்
தூய்மை பேண 15,000 துப்புரவு பணியாளர்கள்;
போக்குவரத்து வசதிக்காக 3,000 சிறப்பு ரயில்கள்…
என அரசு செய்துள்ள ஏற்பாடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்
விவேகமான செலவு
கும்பமேளாவுக்கு எதற்கு 4,000 கோடி ரூபாய் மாநில அரசு உதவி? இந்த விழாவினால் என்ன லாபம்? வீண் பொருட்செலவு, நிதிச் சுமை, கூட்ட நெரிசல் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு…. இதன் மூலம் வரப்போகும் வருமானத்
தைப் பாருங்கள் மக்களே !
45 நாட்கள் 40 கோடி பேர் என வைத்துக்கொண்டால் வெளியூர் போக்குவரத்து, விடுதிகள், ஹோட்டல்கள், உணவுப் பொருட்கள், உள்ளூரில் சுற்ற சிற்றுந்துகள், சுற்றுலா மையங்கள், கோயில் சார்ந்த வாணிபம், ஆடை அணிகலன் உள்ளிட்ட மற்ற பொருட்கள் விற்பனை என அந்த மாநிலத்தின் பொருளாதாரம் அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிடுமே!
நேரடி வருவாயாக அரசுக்கு 16,000 கோடி ரூபாய் கிடைக்குமென எதிர்பார்க்கின்றனர். அதாவது 4,000 கோடி முதலீடு செய்து நான்கு மடங்கு வருவாய் ஈட்டப் போகிறது உ.பி அரசு. வருங்கால நலத் திட்டங்களுக்கு உதவுமே இந்த நிதி?
வாய்ப்பு கிடைத்தால் நாமும் பங்கேற்போம். திரிவேணி சங்கமத்தில் சக பாரதியர்களுடன் சங்கமம் ஆவோம். வண்ணத் திருவிழாவை கொண்டாடுவோம். மனநிறைவு பெறுவோம்.
அமுதத் துளிகள்
சங்க ஆசிபெற்ற அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத் (நுகர்வோர் அமைப்பு) முயற்சி வெற்றி. சென்னை- ப்ரயாக்ராஜ் தினசரி ரயில் சேவை தொடங்கியது..
பல வெளிநாடுகளில் இருந்து புத்த பிட்சுக்களும் சாதுக்களும் கும்பமேளாவில் பங்கு கொள்ள வருகிறார்கள். ஜப்பானிலிருந்து வந்துள்ள சுவாமி கைலா மாதா எனப்படும் கெய்கோ ஐக்வா என்ற பெண் மகாமண்டலேஸ்வரர் தலைமையில் உலகில் அமைதி நிலவ வேண்டி பன்னாட்டுத் துறவியர் கும்பமேளாவில் பிரார்த்தனை செய்வார்கள். போர்க்களத்தில் மோதிக் கொள்ளும் ரஷ்ய, உக்ரேன் நாடுகளிருந்தும் போர் முடிய பிரார்த்திப்பதற்காக மத பிரமுகர்கள் கும்ப மேளாவை தஞ்சமடைகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் தன் பங்கிற்கு ‘மாசற்ற மஹாகும்ப’ திட்டத்தை முன்னெடுத்
துள்ளது. பிரம்மாண்ட மக்கள் கூட்டத்தால் சுற்றுச் சூழல், நதிகள் மாசுபடுவதைக் குறைக்க நாடு நெடுக ஸ்வயம்
சேவகர்கள் வீடுவீடாக சென்று
ஒரு பை, ஒரு தட்டு வீதம் பெறும் இயக்கம் நடத்
தினார்கள். முதல் தவணை
யாக 31,000 துணிப் பைகள், 16,000 எவர்சில்வர் தட்டுகள் உத்தரப் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சிவன் அருள் கைகூடு”
கும்பமேளாவுடன் சிவபெருமானின் தொடர்பு, அண்டத்தில் என்றென்றும் நடைபெறும் ஆக்கத்தையும் நீக்கத்தையும் காட்டுகிறது. ஆன்மீக தூய்மையை ஆதார சுருதியாகக் கொண்ட திருவிழா கும்பமேளா. அதற்கு ஏற்ப பக்தர்கள் வந்து மன மாசு அகற்றி பக்தி ஓங்கிட, புத்துணர்வுடன் திரும்புகிறார்கள். கும்பமேளாவின் சடங்குகளால், மரபுகளால் ஆன்ம பரிபக்குவம் தரும் புனித சக்தி ஓங்கிடுகிறது. அதற்கு அறிகுறியாக நாம் அக வளர்ச்சி பெற, நமக்கு மோட்சம் கைகூட சிவபெருமான் உந்துதல் தந்தருளுகிறார்.
மூன்று நதிகளின் சங்கமத்தில்…
தீர்த்த க்ஷேத்திரங்களின் அரசன் (தீர்த்தராஜ்) என்று போற்றப்படும் பிரயாக்ராஜ் திருத்தலத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் புனித சங்கமத்தில் கும்பமேளாவின் பிரதான நிகழ்ச்சி நடைபெறும்———————————
வேதம் தந்த ஜோதிட சாஸ்திரம் கூறியுள்ளபடி குரு, சூரியன், சந்திரன் கிரகங்களின் நிலை, ராசி ஆகியவற்றிற்கு ஏற்ப கும்பமேளாவின் நாள், நேரம் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன. அந்த நேரத்தில் நதியில் நீராடுவது மகத்தான புண்ணியம் என்றும் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சில துளிகள்…
அமரத் தன்மை தரும் அமுதத்தைப் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த நிகழ்வே கும்பமேளாவின் தொடக்கம் என்று கருதப்படுகிறது.
முற்றிலும் திகம்பரர்களாக (உடையின்றி) வலம் வரும் நாகா சாதுக்களின் தவ மயமான வாழ்க்கை பிரசித்தி பெற்றது. கும்பமேளாவில் நாகா சாதுக்கள் தான் முதலில் புனித நீராடுகிறார்கள். இவர்களுக்கு ’ஷாஹி ஸ்னான்’ சடங்கில் முதன்மை இடம் பெறும் உரிமை உண்டு.
——————————-உலகெங்கிலுமிருந்து வரும் சுற்றுலா பயணிகளும் ஆராய்ச்சியாளர்களும் முக்கியமாக ஈர்க்கப்படுவது கும்பமேளா
வால் தான். பாரதத்தின் பாரம்பரிய கலை, பண்பாடு, நடன வகைகள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை காட்சிப்
படுத்தும் கும்பமேளாவை மனித குல நாகரிகத்தின் அற்புதமான அத்தாட்சி என்று வெளிநாட்டவர்கள் கருதுகிறார்கள்.
சூரிய கிரகணத்தில் குருக்ஷேத்திரத்திலும் கார்த்திகை மாதத்தில் த்ரிபுஷ்கர க்ஷேத்ரத்திலும் நீராடினால் கிடைக்கும் பலனை விட அதிக புண்ணியம் மாசியில் ப்ரயாக்ராஜில் நீராடுவதால் கிட்டும்.
கும்பமேளாவில் துறவு வாழ்க்கை ஏற்பது சகஜம். மேளாவின் அத்தனை நாட்களும் மேளா ஸ்தலத்திலேயே வசிப்பது என்று ஒரு விரதம் உண்டு. ஸ்தானவாசி என்பது அந்த விரதம்.