ஊரின் பெயரை தெரியாமலேயே மேடை ஏறிவிடுவது, வேலுமணி அனுப்பிய ஆளா என கேட்பது, 5,000, 10,000 இருந்தால் திருமணம் நடத்தமுடியும் என பேசுவது, பாம்பை பார்த்து ஓணான் என்பது, இப்படி, ஸ்டாலின் நடத்தும் கிராம சபையில், அவரின் ஏடாகூடமான பேச்சுகள் சிரிப்பை வரவழைத்தாலும், அதனால் ஏழைகள் படும் அவஸ்தைகள் மறுபுறம் கண் கலங்க வைக்கிறது.
கேள்வி கேட்ட பெண்னை அடித்து ஆபாசமாக பேசுகின்றனர், கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என கூறி பொய்யாக டோக்கன் வினியோகித்து ஏழை மக்களை கூட்டத்துக்கு வரவழைப்பது கூட்டம் முடிந்த பிறகு ஓடிவிடுவது ஆங்காங்கு நடக்கிறது. சில இடங்களில் பொதுமக்கள் சேற்றில் மணிக்கணக்கில் அமர வைக்கப்படுகின்றனர். மேடையில், ஸ்டாலின் எதிரிலேயே ஒரு பெண்மணி மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ பாடல் பாடுவது என்று தி.மு.கவின் கிராமசபை கிறிஸ்தவ திருச்சபையாகவே மாறிவிட்டது என புலம்புகின்றனர் மக்கள்.