‘பாகிஸ்தானைத் துடைத்தழி’ – இது ஒரு மாத இதழின் சிறப்பு மலருக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பு. 1970ல் லக்னோ ஹிந்தி மாத இதழான ‘ராஷ்ட்ர தர்ம’ இந்த மலரை வெளியிட்டதும் அப்போதைய காங்கிரஸ் அரசு அந்த பத்திரிகை மீது வழக்குத் தொடர்ந்தது. ‘அண்டை நாட்டின் மனது புண்படுமே’ என்று அரசு கவலைப்பட்டது! ஆனால் பாகிஸ்தான் என்ற தேசத்தின் மீதல்ல, அந்த தேசம் எந்த துவேஷத்தின் அடிப்படையில் அமைந்ததோ அந்த வெறுப்பை கண்டனம் செய்வதே மலரின் நோக்கம் என்று வாதிட்டு ‘ராஷ்ட்ர தர்ம’ அந்த வழக்கில் வெற்றி பெற்றது.
விஷயம் இதுதான்: ஹிந்துஸ்தானத்திலிருந்து வெறுப்போடு பிரிந்த , பகைஸ்தானாகி நமது தேசத்திற்கு கணத்த 60 ஆண்டுகளாக தலைவலி தந்து வருவதால், ‘உலக வரைபடத்திலிருந்து அந்தப் பிரதேசத்தை துடைத்தழித்து விடுவதுதான் சரி’ என்று அநேகமாக அனைவர் மனதிலும் ஒரு தவிப்பு ஏற்பட்டிருப்பதை மறைக்க முடியாது.
மகாபாரத திரௌபதிக்கும் இதேபோன்ற தவிப்பு ஏற்பட்டது. யுத்தம் வராமல் போய் விடுமோ என்று அவள் பதறினாள். கண்ணன் வேறு துரியோதனனிடம் தூது போகிறான், சமாதானம் ஏற்பட்டு விட்டால்? கண்ணனை வழிமறித்து திரௌபதி கூறினாள்: அண்ணா நான் செய்த சபதம் நிறைவேற யுத்தம் அவசியம். நீங்கள் தூதுபோய் சமாதானம் ஏற்படுத்தி விடாதீர்கள்” என்று மன்றாடினாள். புன்முறுவலுடன் கண்ணன், தங்கையே, துரியோதனனை நம்பு. அவன் நடந்து கொள்கிற விதத்தில் யுத்தம் வந்தே தீரும்” என்றான்.
பாரத ராணுவ ஜவான்கள் 20 பேரைக் கொன்ற பயங்கரவாதிகளை ஊட்டி வளர்க்கும் பாகிஸ்தான் மீது போர் தொடுத்து தண்டிக்க வேண்டும் என்ற சராசரி பாரதவாசியின் ஆசையை பாகிஸ்தான் நிறைவேற்றியே தீரும்’ என்றே தோன்றுகிறது. அந்த நாடு அவ்வளவு கேவலமாக நடந்துகொள்வதுதான் காரணம்.
செப்டம்பர் 18 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரீயில் பாரத ராணுவ வீரர்களை கோழைத்தனமாகக் கொலை செய்தன. பாகிஸ்தானி எடுபிடிகள்; பழியை பாரதத்தின் மீதே போடும் கேலிக் கூத்தையும் அரங்கேற்றியது. அடுத்த இரண்டே நாளில் சர்வதேச அரங்கில் பாரத ராஜதந்திரம், பாகிஸ்தானை தோலொரித்துக் காட்டி விட்டது. ஐநாவின் பான் கீ மூனிலிருந்து ‘தோஸ்த்’ சீனா வரை எல்லாத் தரப்பினரும் பாகிஸ்தானை மூக்கறுப்புக்கு உள்ளாக்கினார்கள். வாய்க்கரிசி போடும் அமெரிக்காவும் பாகிஸ்தானுக்கு ‘புத்திமதி சொல்லத் தவறவில்லை. பாரதத்தின் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தானும் பங்களாதேஷும் பாகிஸ்தானை கண்டனம் செய்து பாரத அணியில் சேர்ந்தன.
இப்படியெல்லாம் நடந்திருப்பதால் பாகிஸ்தான் வாலைச் சுருட்டிக்கொண்டுவிடும் என்பதற்கில்லை. அதன் ஹிந்து விரோத வெறி தாறுமாறாக நடப்பதற்கு அதை தூண்டாமல் இருக்காது. எனவே பாரத அரசின் சார்பில் பாகிஸ்தானால் தாங்க முடியாத அளவுக்கு அதற்கு அடி கிடைக்கும்” என்றும், எப்போது, எங்கே, எப்படி என்பதை பாரதம் தீர்மானிக்கும்” என்றும் அறிவிக்கப்பட்டதெல்லாம் நிஜமானாமல் போகாது.
சராசரி பாரதவாசிக்கு உள்ள ஒரே நம்பிக்கை இதுதான்