காவிரி புனிதம், காவிரி சுத்தம்?

 

தமிழகத்தின் ஜீவநதியாகிய காவிரி நதி கடந்த சில மாதங்களாக, வறண்டு கிடந்த அவலத்தை பார்த்தோம். கடந்த இரண்டு வருடங்களில் ஒருசில மாதங்களைத் தவிர, பெரும்பாலான மாதங்களில் காவிரி கடலில் சென்று கலக்கவே இல்லை. மழையில்லை என்பது பொதுவான காரணமாக கூறப்பட்டாலும், நதிகளை நாம் சரிவர பராமரித்திடவே இல்லை என்பதுதான் உண்மை. கனமழை பெது, மேட்டூர் அணை  நிரம்புகின்ற சமயங்களில், இரண்டு லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் சென்று கலக்கின்ற அவலத்தையும் காண்கிறோம். ஆகவே வருங்காலங்களில் காவிரி நதி என்பது, கர்நாடகத்தின் வடிகால் நதியாக மாறிவிடுகின்ற அபாயம் உள்ளது.

குடகு பகுதியை வன பிராந்தியமாக அறிவிக்க வேண்டும்

கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் தலைக்காவிரியில் தோன்றுகிற காவிரி நதியை, நான்கு பாகங்களாக பிரிக்கலாம்; குடகு முதல் மேட்டூர் வரை காவிரிக்குள்ள பிரச்சினை, முந்தைய காலங்களை போன்று குடகு பகுதிகளில் மழை பெவதில்லை என்பது தான். இதற்கு அடிப்படைக் காரணமே, வானுயர்ந்த மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்தி, வனப் பகுதிகளை அழித்து விட்டு, அந்த வனங்களையெல்லாம் காபி, தேயிலைத் தோட்டங்களாக மாற்றியதே ஆகும். வானுயர்ந்த மரங்கள் வனப்பகுதியில் இருந்தால் மேகக்கூட்டங்களை ஈர்த்து மழையாக பொழிய வைக்கும். வெறும் மூன்று அடி உயரமுள்ள தேயிலை செடிகளால் மழை பொழிய வைக்க முடியாது. ஆகவே காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில், மத்திய அரசின் வனத்துறை மூலம் மரங்களை நட்டு பராமரித்திட வேண்டும், குடகு  மாவட்டத்தை  வன பிராந்தியமாக அறிவிக்க வேண்டும்.

காவிரியில்  கழிவுகள் கலப்பதை தடுத்திட வேண்டும்

மேட்டூர் முதல் கரூர் வரையிலான, காவிரியின் இரண்டாவது பாகத்தில், பவானி, குமாரபாளையம், ஈரோடு போன்ற நகரங்களில் உள்ள சாயப்பட்டறைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் நேரடியாக காவிரியில் கலக்கின்றன. இந்த அசுத்த நீரை குடிப்பதால் புற்றுநோ உள்ளிட்ட பலவிதமான இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாகிறார்கள். அரசாங்கம் பல முயற்சிகள் எடுத்தாலும், கழிவு நீர் கலப்பதை முழுமையாக நிறுத்த முடியவில்லை. இதற்கு ஒரே தீர்வு, காவிரியின் இரண்டு கரைகளையும் உயர்த்துவதே ஆகும்.

மணல் கொள்ளையால் சீரழியும் காவிரி

கரூர் முதல் திருச்சி வரையிலான காவிரியின் மூன்றாவது பாகத்தில், கரூர், தொட்டியம், முசிறி போன்ற இடங்களில்,  காவிரிபப் படுகையில், ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் தொடர்ந்து, முப்பது அடிகளுக்கு மேலாக மணலை சுரண்டுவது மிகப்பெரிய கொடுமை. இந்த பகுதியில் மணல் அள்ளுவது பணம் கொட்டும் வியாபாரம். இதனால் இந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 800  அடிகளுக்கு கீழாக சென்று விட்டது. ஆற்றின் நடுவே ஆங்காங்கே பள்ளம் தோண்டுவதால்,   மேட்டூரில் திறந்து விடப்படும் நீர், திருச்சியை சென்றடைவதற்கு பல நாட்கள் ஆகின்றது. மணல் அள்ளுவதை முற்றிலுமாக அரசாங்கம் தடை செது, செயற்கை மணல் மற்றும் ஜல்லிகளில் இருந்து தயாரிக்கப்படக்கூடிய மணல்வகைகளை பயன்படுத்திட ஊக்குவிக்க வேண்டும்.

தூர் வார வேண்டிய கடைமடை பகுதி

திருச்சி முதல் பூம்புகார் வரையிலான காவிரியின் நான்காவது பாகத்தில், கல்லணை தாண்டிய பிறகு, காவிரி பல கிளை நதிகளாக பிரிந்து, தஞ்சை மண்டலத்தையே வளமாக்கி விட்டு, பூம்புகாரில் கடலில் சென்று கலக்கிறது. இந்த பகுதிகளில் மழை காலங்களில், உபரியாக வருகின்ற வெள்ள நீரை தேக்கி வைத்திட, போதிய தடுப்பணைகள் அமைத்திட வேண்டும். அதே போன்று பல வழித்தடங்கள் புதர் மண்டி தூர்ந்து உள்ளது. இவற்றை அரசாங்கம் மட்டுமல்லாது, தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து தூர்  வாரினால், காவிரியின் நீர் கடை மடைப் பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி சென்று, விவசாயத்திற்கும், நிலத்தடி நீர்மட்டம் செழிப்பதற்கும் உதவும்.

காவிரி புஷ்கரத்தில் நாம் செய வேண்டியது

காவிரி புஷ்கர காலத்தில், அனைவரும் காவிரியில் புனித நீராட வேண்டும். காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்திட முயற்சிகள் செய வேண்டும். குறிப்பாக படித்துறைகளில் புனித நீராடிவிட்டு, பழைய துணிகளை ஆற்றிலே போடுவதை தடுத்திட வேண்டும்.பழைய துணிகளை போடுவதற்காக தொட்டிகளை ஏற்பாடு செது வைக்கலாம்.  ஆற்றங்கரை பகுதிகளில் வசிப்பவர்கள் ஆற்றில் மல ஜலம் கழிப்பது தவறான செயல்  என்பதை உணர்த்திட வேண்டும். இதுகுறித்து   மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள ஆன்மிக பக்தர் குழுக்கள் மூலமாக மாதம் ஒருமுறை, காவிரி நதிக்கு புனித ஆரத்தி எடுத்து, வழிபடச் செயலாம். பவானி, குமாரபாளையம் போன்ற நகரங்களில் பௌர்ணமி தினத்தில், பொதுமக்கள் குழுக்களாக சென்று ஆரத்தி எடுத்து வழிபட்டு வருகிறார்கள். தாமார்கள் ஆற்றங்கரையில் மஞ்சளில் பிள்ளையார் செது வைத்து வழிபட்ட பிறகு, அந்த மஞ்சள் பிள்ளையாரை ஆற்றில் விசர்ஜனம் செய கூற வேண்டும். ஆற்று நீரில் மஞ்சள் கரைப்பதால், ஆற்றின் அசுத்தங்களை ஓரளவு கட்டுப்படுத்திட முடியும்.

உலகின் மற்ற நாடுகளில், நதியை தெவமாக வணங்கும் வழக்கம் இல்லை; ஆனால் அவர்கள் ஆற்றை சுத்தமாக வைத்திருக்க பெருமுயற்சி செகிறார்கள். நாம் நதியை தெவமாக போற்றுகிறோம்; ஆனால் சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை. இந்த முரண்பாடு நீங்கினாலே, காவிரி மீண்டும் உன்னத நிலையை அடைந்திடுவாள்.