காவிரி தாய்க்கு ஆரத்தி வழிபாடு

அகில பாரதிய துறவியர்கள் சங்கம் மற்றும் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் காவிரி விழிப்புணர்வு ரதயாத்திரை கர்நாடக மாநிலம் குடகுமலை தலைக்காவிரியில் தொடங்கி பூம்புகார் வரை நடைபெறும். இந்த ஆண்டு கடந்த மாதம் 21ம் தேதி கர்நாடக மாநிலம் குடகுமலையில் தலைக்காவிரியில் இந்த ரதயாத்திரை தொடங்கியது. ஒசூர், பவானி, மேட்டூர், திருச்செங்கோடு, கரூர், திருக்காட்டுப்பள்ளி வழியாக வந்த ரதயாத்திரை தஞ்சை மாவட்டம் திருவையாறை அடைந்தது. அங்கு மாலையில், நதிநீர் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக, திருவையாறு புஷ்யமண்டப படித்துறையில் அன்னை காவிரிக்கு ஆரத்தி எடுத்து சிறப்பு அபிஷேகம், நடத்தப்பட்டது. இதில் திருவையாறு பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்துகொண்டு காவிரி தாயை வழிப்பட்டனர்.  இதேபோல, திருக்காட்டுப்பள்ளி காவிரி படித்துறையிலும் காவிரி அன்னை மற்றும் விநாயகர் சிலைகளை வைத்து அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.