இந்த விஜயதசமியோடு ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு 95 வயது ஆகிறது. இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ லட்சம் ஸ்வயம்சேவகர்கள் ஹிந்து சமுதாய பெருமக்களை தொடர்பு கொண்டு சங்கத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்
கள். அதனால் சங்கம் வளர்ந்திருக்கிறது.
தொடர்பு கொள்ளும்போது பலருக்கு பல நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றையெல்லாம் தொகுத்தால் ‘இப்படியெல்
லாமா சங்கத்தை சமுதாயம் புரிந்து கொண்டிருக்கிறது’ என்று ஆச்சரியப்படத் தோன்றும். இங்கே சில அனுபவங்கள்:
சென்னை ஏ.எம்.ஜெயின் கல்லூரி பேராசிரி
யர் ஒருவரை அவரது இல்லம் சென்று ஆர்.எஸ்.எஸ் பற்றி அறிமுகம் செய்ய முயன்ற ஒரு அன்பரிடம் அவர் ‘ஆர்.எஸ்.எஸ்ஸா? அதே நமஸ்தே சதா வத்ஸலேதானே இன்றும்?’ என்றாரே பார்க்கலாம்!
சென்னையிலிருந்து 70கள் முடியும் வரை வெளிவந்துகொண்டிருந்த தி மெயில் ஆங்கில மாலை நாளிதழ் ஆசிரியர் வி.பி.வி ராஜன் சென்னை மயிலை தனியார் இதழியல் கல்லூரி ஒன்றின் பிரின்சிபாலா
கவும் இருந்தார். அவரிடம் கல்லூரியில் சேர விண்ணப்பித்த ஒரு ஸ்வயம்சேவகர் அப்போதைய சர்சங்கசாலக் ஸ்ரீகுருஜி மறைவை அடுத்து வெளியான தியாகபூமி வார இதழை அவரிடம் காட்டியபோது ‘கோல்வல்கர் இறந்து
விட்டாரா? யார் உங்கள் அடுத்த குருஜி?’ என்று கேட்டார். ஆர்.எஸ்.எஸ் பற்றி அந்த நாளிதழ் ஆசிரியருக்கு அந்த அளவுக்கு தெரிந்திருந்தது.
அஸ்ஸாம் மாநிலத்தில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீராமகிருஷ்ண மடத்து துறவி ஒருவரிடம் ஸ்வயம்சேவகர் ஒருவர் சங்கத்
தைப் பற்றி பேச்செடுத்ததும், ‘உங்கள் சங்கத்
தில் இன்றும் அந்த உத்திஷ்ட உபவிஷ உண்டு
தானே?’ என்று தான் சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவை பார்த்த ஞாபகத்தில் சொன்னார்!
தொடர்பு கொள்ளும் சமயத்தில் சமுதாய அன்பர்கள் தமக்கு ஏற்பட்ட ஐயம் காரணமாக சில கேள்விகளை எழுப்புவதும் உண்டு. இப்படித்தான் சென்னை ஸ்வயம்சேவகர் ஒரு குடும்பத் தலைவரை அணுகி ஹிந்து ஒற்றுமை பற்றி சொல்லத் தொடங்கி
யதும் அவர் ‘நான் அரசு ஊழியர். ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு வரலாமா?’ என்றார். பரிவுடனும் பாதி நகைச்சுவையுடனும் அந்த ஸ்வயம்சேவகர் ‘18 வயதிற்கு முன்பும் 58 வயதிற்கு பின்பும் உங்களால் அரசு ஊழியராக இருக்க முடியுமா? ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகரானால் ஆயுள் முழுதும் ஸ்வயம்சேவகராகவே இருக்கலாமே?’ என்று பதிலளித்தார்.
விவரம் தெரியாமல் பலரும் சங்கத்தை எதிர்த்த சூழ்நிலையில் இருந்ததைவிட இன்று ஹிந்து ஒற்றுமை செயல்பாட்டாளர் தொடர்பு பணியை அதிக சவாலாக உணர்கிறார். காரணம் சமுதாயம் சங்கத்திடம் எதிர்பார்ப்பது நூற்றுக்கணக்கான மடங்கு அதிகரித்திருக்கிறது. அப்படிப்பட்ட வேளைகளில் ‘‘எதையும் ஆர்.எஸ்.எஸ் செய்
யாது; ஸ்வயம்சேவகர்கள் செய்வார்கள்’’ என்று சங்க பெரியவர்கள் அடிக்கடி கூறும் வாக்கியம் அவர்களுக்கு கைகொடுக்கும்.