காதல் ஜிஹாத் : பெற்றோரின் பங்கு என்ன?

நான் ஒரு பையனைக் காதலிக்கிறேன்”- என்று ஒரு பெண் தன் பெற்றோரிடம் கூறும்போது – பெரும்பாலும் அவளின் தாயிடம் முதலில் – அந்தப் பெற்றோரிடம் அது ஏற்படுத்தும் முதல் தாக்கம் எது? ஜாதி சார்ந்த உணர்வா? தங்கள் பெண் தங்கள் கட்டுப்பாட்டை மீறி, தானே முடிவு எடுத்து விட்டாளே என்ற ஆத்திரமா? அல்லது இந்தப் பெண் எடுத்துள்ள முடிவால் உறவினர்களிடையே தாங்கள்  சந்திக்க நேரக்கூடிய சங்கடங்களா? இவை எல்லாம் இருக்கக்கூடும் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதை எல்லாம் கடந்த நுட்பமான உணர்வு ஒன்று உள்ளது – அது ஏற்படுத்தும் தாக்கம் உளவியல் பூர்வமானது. அப்படி ஒரு பெண்ணின் தாயார் – எங்கள் குடும்ப நண்பர்- அவருடைய மகள் தன் காதலை அறிவித்தபோது சொன்ன விஷயம் நுட்பமானது. ஏங்க, சின்ன வயசில் இருந்து இந்தப் பெண்ணுக்கு எத்தனை விஷயம் பார்த்துப் பார்த்து செய்து இருக்கோம்? அவளுக்கு நல்ல ஸ்கூல் எது? அவளுக்கு விருப்பமான கோர்ஸ் எது? இப்படி ஒவ்வொரு விஷயமும் அவளுடைய நல்லதுக்கு பார்த்துப் பார்த்து செய்யும் எங்களுக்கு, அவளுக்கு ஒரு நல்ல துணையை மட்டும் நாங்க தேர்ந்து எடுப்போம்னு நம்பிக்கை ஏன் இல்லாம போச்சு?”- ஆக இதுதான் அடிப்படையாக பெற்றோர் அடையும் ஏமாற்றம், வலி!

மேற்சொன்னது போன்ற நிகழ்வுகளில் அந்தப் பெண், அவள் காதலிக்கும் பையன் இருவரும் நன்கு படித்து, சாதியால் வேறுபட்டாலும், நல்ல வேலையில் இருக்கும் நிலையில் நடப்பவை. ஆனால் இன்று தமிழகத்தில் பெருக்கெடுத்துள்ள,

‘காதல்’ என்ற  பெயரில் உலா வருகின்ற, ஆண் -பெண் இணைவுக் கேளிக்கை மிகவும் வித்தியாசமானது. இதற்கு திரைப்படங்கள் அளிக்கும் ஊட்டம் மிக அபாயகரமானது. அவள் நன்கு படித்து, ஒரு மென்பொறியாளர் அல்லது வேறு ஏதோ நல்ல வேலையில் கணிசமான சுய சம்பாத்தியத்தில் இருப்பாள். அல்லது ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்த பள்ளி அல்லது கல்லூரி மாணவியாக இருப்பாள். இவளுக்கு அழகிலோ, அந்தஸ்திலோ, படிப்பிலோ சற்றும் பொருந்தாத, சொந்தமாக எந்த வேலையோ, தொழிலோ இல்லாத, முகத்தில் ஒரு  ரவுடிக்களை கொண்டவனுடன்தான் காதல் வரும். இப்படித்தான் ஒரு கௌரவமான குடும்பத்துப் பெண், ஒரு கீழ்த்தரமான ரவுடியைத்தான் காதலிக்க வேண்டும்- கட்டாயம் அவன் வாயில் சிகரெட் புகைய வேண்டும்; அவன் கையில் மது பாட்டில் இருக்க வேண்டும்; அவன் கட்டாயம் லுங்கியை மடித்துக் கட்டியபடி உலவ வேண்டும்; முகத்தில் கட்டாயம் தாடியும், ஒரு காதில் மட்டும் கடுக்கனும் அணிய வேண்டும். முடிந்தால் அழுக்கு ஜீன்சும் செகண்ட் ஹாண்டில் வாங்கிய மோட்டார் சைக்கிளும் அவனுக்கு இருக்க வேண்டும். அவன்தான் சமுகத்தின் ‘விளிம்பு நிலை’ மனிதன் – இவர்களின் இலக்கணப்படி! அப்படி விளிம்பு நிலை இளைஞனை இவள் காதலிப்பதும் அவனுடன் ஓடுவதும்தான் மகா புரட்சி! இப்படித்தான் திரைப்படங்கள் மன முதிர்ச்சியற்ற – காதல் என்ற பெயரில் அந்தப் பெண் மயங்கும் வெறும் ஆண் – பெண் இணைவை – நியாயப்படுத்துகின்றன. அப்படிப் படம் எடுக்கும் நபர்களின் வீட்டுப் பெண்கள் ‘பெற்றோர் ஏற்பாட்டில்’ திருமணம் செய்து, நன்கு படித்து, நல்ல வேலையில் கணவனுடன் அயல் நாட்டில் செட்டில் ஆகி இருப்பாள்!

அதிலும் இப்போதைய நிலையே வேறு. ‘நாடகக் காதல்’ என்று ஒரு தமிழக அரசியல் கட்சித் தலைவர் விமர்சித்தாரே, அப்படிப் பணத்தைக்  குறி வைத்து, குறிப்பிட்ட நோக்கத்துடன் இயங்கும் காதல்கள் பெருகி விட்டன. காதலுக்கு சாதி இல்லை, மதமும் இல்லையே – கண்கள் பேசும் வார்த்தையிலே பேதம் இல்லையே”- என்று ‘பாவ மன்னிப்பு’ பாட்டைத் திரையில் பார்த்துவிட்டு, புரட்சிக் குஞ்சுகளாக மாறி மாற்று மதத்தவரைக் பெண்களுக்கு, திருமணம் நடந்த பின்புதான் பெரும்பாலும் அதிர்ச்சி காத்திருக்கிறது. நீ உன் மதப்படி பின்பற்று: நான் என் மதப்படி இருக்கிறேன்: இருவருக்கும் இடையில் அன்பு மட்டுமே பாலமாக இருக்கும்”- என்றெல்லாம் காதலிக்கும் காலத்தில் நீட்டி முழக்கிப் பேசப்பட்ட வசனங்களும் வாக்குறுதிகளும் காற்றில் பறந்துபோய் அவள் முன்னே பர்தாவோ, சிலுவையோ நீட்டப்படும் போதுதான் அவளுக்கு முதல் நெருடல் ஏற்படுகிறது. மண்டியிடு, பிரார்த்தனை செய், ஜெபம் செய்”- என்றெல்லாம் முதலில் அறிவுறுத்தலாக, பிறகு கட்டளைகளாக பிறகு குழந்தைகளின் எதிர்காலத்தை சொல்லி வன்மையான திணிப்புகளாக அவள் மீது சுமத்தப்படும்போதுதான் அவள் மெல்ல ஒரு வெறுமையை உணர ஆரம்பிக்கிறாள் – ஆனால் காலம் கடந்த புரிதல் அது!

எங்கள் பெண்ணை மதம் மாற்றி விட்டார்கள்; முக்காடு போடச்சொல்லி வற்புறுத்துகிறார்கள் – ஜெபக் கூட்டத்தில் முட்டிப்போட வைக்கிறார்கள் – எங்கள் வீட்டில் இருந்த வரை அவளுக்கு பூஜை அறையை சுத்தம் செய்யும் வேலை கூட கொடுத்தது இல்லை” – என்று இப்போது கதறும் பெற்றோர்கள் அவள் வளரும் காலத்தில் எதைக் கற்றுக்கொடுத்தார்கள்? காதல், திருமண வாழ்வு போன்றவற்றில் எத்தகைய புரிதலை உண்டாக்கினார்கள்?

வீட்டுக் கூடத்தில் மேற்கண்ட பொருந்தாக் காதலை சிலாகித்து, அதைப் புரட்சி என்று கொண்டாடி, உச்சி முகரும் படங்களை தொலைக் காட்சியில் பார்த்து மிகவும் ரசிக்கும் பெற்றோர்கள், தங்கள் பெண்ணுக்கு ஒரு தவறான முன் உதாரணமாக தங்களின் ரசனை அமைந்து விடுவதை உணர்வதில்லை. 13 அல்லது 14 வயதில்  அப்போதுதான் பருவம் அடைந்து வாலிபத்தின் தலைவாசலில் நிற்கும் பெண்ணுக்கு, மேற்கண்ட படங்களை ரசிக்கும் பெற்றோர்கள் ஆதர்சமாகி விடுகிறார்கள்.

இப்படி ‘நாடகக் காதலில்’ விழும் பெண்களுக்கு இன்னொரு கண்ணி அந்தப் பையனின் சகோதரி. அந்தப் பெண் இவளுடைய வகுப்புத் தோழியாக இருப்பாள். ‘ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாயேண்டி – எங்க அண்ணன் ரொம்ப கலகல டைப்; எங்க வீட்டு பிரியாணியை ஒரு முறை டேஸ்ட் பண்ணிதான் பாரேன்’.. –  இப்படி விடுக்கப்படும் அழைப்புகளே அவள் தடம் மாறுவதின் முதல் படி! அல்லது கும்கி யானையை விட்டு, புதிய யானையைப் பிடிப்பது போல ஏற்கனவே காதலில் விழுந்த இன்னொரு வகுப்புத்தோழி இவளுக்கு ‘காதல் வழிகாட்டி’ யாக இருப்பாள். பெரும்பாலும் அந்த வகுப்புத் தோழிதான் இவளுடைய காதல் என்று நினைத்து மயங்கும் உணர்வுத் தூண்டலுக்கு அச்சாரம் போடுபவளாக இருப்பாள்.

இந்த நிலையில் பெற்றோர் என்ன செய்கிறார்கள்? பழக்கம், நட்பு, தோழமை .. என்பதற்கெல்லாம் உள்ள பேதங்களை நுட்பமாகப் புரிய வைக்கிறோமா? ஐயோ என் பெண்ணுக்கு பிரெண்ட்ஸ் ரொம்ப ஜாஸ்தி- இவள் லீவுக்கு வந்தாலே இவளைத் தேடி ஒரு பட்டாளமே வந்துடும் – ஒரு நிமிஷம் வீட்டில் தங்க மாட்டாள்” – என்று பெருமை அடிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்! அப்படி அவளுடன் மகா நட்பு பாராட்டும் பெண்கள் யார் என்பதைக்  கண்காணிக்கிறார்கள்? தங்கள் பெண் வீட்டை விட்டு ‘புரட்சிக் காதலனுடன்’ ஓடிய பிறகுதான் இவர்கள் தங்கள் பெண்ணின் தோழர், தோழிகளின் வீட்டுக்கு போன் செய்து கேட்கும் போதுதான் இவர்களுக்கு தெரியவரும்:- உங்களுக்குத் தெரியாதா ஆன்டி, அந்த …… உடைய அண்ணன்தான் இவளோட லவ்வர்”- என்று அந்த வேறு மதம் சேர்ந்த பையனைத் தங்கள் பெண் ‘காதலித்தது’ தெரிய வரும் இவர்களுக்கு.

நம்முடைய பாரத கலாச்சாரம் ஏதோ மிக மௌடீகமாக, காதல் என்பதையே எதிர்க்கும் பிற்போக்கு கலாச்சாரமாம். இந்த ‘பிற்போக்கு’ கூண்டில் இருந்து விடுபட்டு விரும்பிய எவனுடனும் வாழ்தலே புரட்சி என்ற எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிவதில் பெற்றோரின் பங்கு என்ன? கன்னி மாடத்து சீதை ராமனோடு கண்ணோடு கண் நோக்கிக் கலந்த இதிகாசக் காதல் முதல், அந்த ராஜபுத்திர மன்னனை நேரில் காணாமல் அவனுடைய வீர பராக்கிரமத்தை கேள்விப்பட்டே அவன் மீது காதலை வளர்த்துக் கொண்ட ராணி சம்யுக்தா வரை, தமிழில் காமத்துப் பால் கொண்ட குறள் முதல் அகத்துறை என்றே காதலுக்கு இடம் அமைத்த இலக்கிய மரபல்லவா நமது மரபு? இறைவனைப் பாடிப் பரவும் போதே, அந்த பக்திக்கே- பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்க விழையும் துடிப்புக்கே  ‘சிருங்கார ரசம்’ என்று பெயரிட்டு நாயகன் – நாயகி பாவத்தில் பாடல்கள் தந்த மரபு ஆயிற்றே நம் மரபு? இந்த தேசம் காதலைக் கொண்டாடாத தேசம் இல்லை: இந்த நவீன ‘லிபரல்கள்’  சித்தரிப்பது போல நம் மரபு பிற்போக்கானதும் இல்லை; இதை உடைத்து எறிந்துவிட்டு இவர்கள் போய்ப் புகுந்து கொள்ளும் போர்வைகள் முற்போக்கானவையும் அல்ல.இவற்றை அந்தப் பெண்களின் இளம் மனதில் பதிய வைக்க பெற்றோர்களின்  பங்களிப்பு என்ன?

பெற்றோர்களே உங்கள் வீட்டுக் கூடத்தில் தொலைக்காட்சியில் நீங்கள் எந்த கலாச்சார உள்ளீடுகளை அனுமதிக்கிறீர்கள்? நீங்களே ரசித்து மகிழும் திரைப்படங்களின் அடிநாதமான செய்தி என்ன? அவை எதை நியாயப்படுத்துகின்றன? உங்கள் பெண்ணின் வகுப்புத் தோழிகள் முதல், அல்லது உங்கள் பெண் பணி புரிபவராக இருந்தால் அவளுடைய சகாக்கள் பற்றி நீங்கள் எந்த அளவுக்கு அறிந்து வைத்து இருக்கிறீர்கள்? உங்கள் மகளுடன் செல்போன், வாட்ஸப், ஈ மெயில் போன்றவற்றில் அடிக்கடி தொடர்பு கொள்ளுபவர்களைப் பற்றி உங்கள் மகள் உங்களுடன் எந்த அளவு பகிர்ந்து கொள்கிறாள்?

இதில் இன்னொரு வகை பெருந்தன்மை என்பதைத் தவறாக செயல்படுத்தும் பெற்றோர்கள். அதாவது தங்கள் பெண்ணின் மொபைல் உள்ளிட்ட தொடர்புகளைப் பற்றி எல்லாம் விசாரிக்க மாட்டார்களாம், அது அவளுடைய அந்தரங்கமாம்! இவர்கள் ரொம்ப டீசண்ட்டாம்! உங்களை யார் இண்டீசன்ட் (நாகரிகம் அற்றவர்கள்) என்று சொன்னார்கள்? உங்களை கண்காணிக்கச் சொல்லவில்லை. ஒரு பொறுப்புள்ள பெற்றோராக உங்கள் பெண்ணின் நட்பு வட்டத்தில் உள்ளவர்களின் பெயர்களை மட்டுமாவது தெரிந்திருக்க வேண்டாமா? அதில் ஏதேனும் சுருதி பேதம் தென்பட்டால் அவளை எச்சரித்து (மிரட்டி அல்ல)  அதில் உள்ள அபாயத்தைப் புரியவைக்கும் பொறுப்பு இல்லையா உங்களுக்கு?

படிக்கப் போகும் இடத்தில், அல்லது பணிபுரியும் இடத்தில் மகளே உன்னுடைய நோக்கம், லட்சியம் இதுதான்: நீ இந்தக் குறிப்பிட்ட செயலை – சிறப்பாகப் படித்துத் தேர்ச்சி பெறுதல் அல்லது சம்பாதித்து உன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதல் – இவையே உன்னுடைய இலக்கு. இதில் நீ எதில் தடம் மாறினாலும் அது உன் இழப்புக்கே வழி வகுக்கும். காதல், காமம் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இயல்பான ஒன்றுதான். ஜோடி பிரிந்ததால் கதறிக் கூவும் கிளிகள் உண்டு. இன விருத்தியின் பொருட்டே இயற்கை சில  உடல் தூண்டல்களை வழங்கி உள்ளது. அறிவால் உயர்ந்த மனிதன் அதற்குக் காதல் என்று பெயரிட்டான், இலக்கிய நயங்களை சேர்த்தான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கை அல்ல. உழைப்பால் பொருள் ஈட்டல், ஈட்டிய பொருளைப் பாதுகாத்தல், பெற்றோர் முதல் உற்றார் உறவினர் வரை அனைவருடனும் இயைந்து வாழ்தல், மகிழ்ச்சியைப் பகிர்தல், உற்ற நேரத்தில் உதவுதல்… என்று வாழ்க்கை பல்வேறு அம்சங்களைக் கொண்டது. இதில் காதல், அதன் பின்னணியில் உடல் சார்ந்த அழகுத் தூண்டல் என்பதெல்லாம் வாழ்க்கை என்ற மிகப் பெரிய சக்கரத்தின் மிகச் சிறிய ஒரு பகுதி. இதுவே முழு வட்டம் அல்ல, வாழ்க்கை சுழற்சியின் முழு அம்சமே காதலோ, காமமோ மட்டும் அல்ல. இது தவறல்ல. ஆனால் இது மட்டுமே நிஜம் அல்ல..” பேச வேண்டும் பெற்றோர்களே பேசுங்கள். எத்தனை பேர் பேசி இருக்கிறோம்?

உங்கள் பெண் ஓடிப்போன பின், வீடு வீடாக போன் போட்டுத் தேடுவதை விட, உங்கள் வீட்டுக்குள் தொடக்கம் முதலே, அவள் பருவம் எய்தியது முதலே, அவளுக்கு நேரம் ஒதுக்கி அவளிடம் பொறுமையாக மனம் விட்டுப் பேசுங்கள். ‘லவ் ஜிகாத்’ என்று பிற்காலத்தில் அழுது புலம்புவதை விட, இப்போதே அவளுக்கு நம்முடைய மரபு சார்ந்த காதல் இலக்கியங்களை, காதலை வெறும் உடல் இச்சையாக இல்லாமல் அதை தெய்வீகப்படுத்திய நமது மரபைப் புரிய வையுங்கள். வளர்ச்சி அடையும் உங்கள் பெண் பண்பாட்டு ரீதியாக மலர்ச்சி அடைகிறாளா என்பதையும் கவனியுங்கள். உங்களுடைய இந்தப் பக்குவமான வழிகாட்டுதலே அவளுடைய சார்புகளையும், பார்வைகளையும் பின்னாளில் செம்மைப் படுத்தும்.

 

 

 

செய்தி சொல்லும் சேதி

செய்தி : உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேதி : ஹிந்துப் பெண்களே….. உஷார்…. உங்களை வைத்தே உங்களைப் பெற்றவர்களுக்கு நீங்களே தண்டனை வாங்கித்தரும் அவலத்திற்கும் மிகப் பெரிய பாவத்திற்கு ஆளாக்கப் படுவீர்கள்…! சங்கர் படுகொலைக்கு பிறகு நிம்மதியின்றி தவித்த எனக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – கவுசல்யா.

பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்ட்டுகளின் வலையில் சிக்கினால் பெற்ற தாய் தந்தைக்கே மரண தண்டனை வாங்கித்தரும் அளவிற்கு மூளைச்சலவை செய்யப்படுவீர்கள். அதற்கு சிறு உதாரணமே இன்றைய தீர்ப்பு.

சீதா (முகநூலில்)