பெண்களுக்கான அதிகாரம் பற்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய இரண்டு நாட்களில் காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தானில், குழந்தைகள் திருமணங்களை பதிவு செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. ராஜஸ்தான் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் சாந்தி தரிவால், இது குறித்து கூறுகையில், குழந்தைகள் திருமணம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் திருமணத்தை பதிவு செய்த பிறகு திருமணத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். வாக்களிக்கும் முறையில்தான் இதனை நிறைவேற்ற வேண்டும் என்ற பா.ஜ.கவின் கோரிக்கையை புறக்கணித்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இம்மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்றியது. ‘இம்மசோதா காங்கிரசின் இரட்டை மனநிலையை பிரதிபலிக்கிறது. குழந்தைத் திருமணமே தவறு, அது தடுக்கப்பட வேண்டும் எனும்போது, அதை ஏன் பதிவு செய்ய வேண்டும், பிறகு ஏன் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும்? அனைத்து நாடுகளும் குழந்தை திருமணங்களை ஒழிக்க முயற்சிக்கையில், ராஜஸ்தான் அரசு அவற்றை ஊக்குவிக்கிறது. இது அவர்களின் வாக்கு வங்கி அரசியல், ஜாதி பஞ்சாயத்துகளை மகிழ்விக்கும் செயல்’ என ஜோத்பூரில் உள்ள சார்த்தி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் கிருதி பாரதி விமர்சித்துள்ளார்.