கள்ளச்சாராயத்தால் ஏற்படும் மரணத்தை தடுக்க தவறிய தி.மு.க

மே 16, 2023 அன்று விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது போன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் கள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்துள்ளனர். மேலும், செங்கல்பட்டில் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் சம்பவத்தில் 40 பேர் ஒண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராய சம்பவங்களைப் பொறுத்தவரையில், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாகத்தான் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன எனவும்,கள்ளச்சாராயம் சாப்பிட்டு மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்காக 10 லட்சம் திமுக அறிவித்து இருப்பது நிர்வாகத் தோல்வியை எடுத்துக்காட்டு இருக்கிறது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இப்படி பல்வேறு கள்ளச்சாராய மரண சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து இருக்கிறது. இத்தகைய சம்பவங்கள் அரங்கேறாமல் இருக்க தமிழக போலீசார் தற்போது அதிகமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்பட்டு வருவதை கண்டுபிடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பேரணாம்பட்டு அருகிலிருக்கும் சாத்கர் மலைக்குள் வற்றாத நீரோடைகளும், சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான மூலப்பொருள்களுள் ஒன்றான குறிப்பிட்ட மரப்பட்டைகளும் அபரிமிதமாகக் காணப்படுகின்றன. இதனால், சட்டவிரோத மாஃபியா கும்பல்கள் சாத்கர் மலைப் பகுதியை ஆக்கிரமித்து, சாராய அடுப்புகளைப் பற்ற வைத்திருக்கின்றன. நீண்டகாலமாக இவர்கள் இங்கு கள்ளச்சாராயத்தை சட்ட விரோதமாக காய்ச்சி வருகிறார்கள். மலைக்குள் ஒளிந்திருக்கும் இவர்களைப் பிடிப்பதற்காக “டிரோன்” கேமராவையும் பறக்கவிட்டு சாராய அடுப்புகளையும், ஊறல் வடிக்கும் பேரல்களையும் கண்டுபிடித்து போலீசார் அழித்தனர்.

 திமுக ஆட்சியில் இப்படி கள்ளச்சாராயம் பெருகி வருவது நாட்டில் சட்ட ஒழுங்கு எப்படி இருக்கிறது? இதுபோன்ற கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்ந்து நிகழுமா? என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான கேள்வியை கேட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இதற்கு திமுக தரப்பில் எந்த ஒரு பதிலும் கூறாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கூட, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தன்னுடைய குடும்பம் மகிழ்ச்சியாகவே இல்லை. தன்னுடைய தந்தையின் மதுப்பழக்கம் காரணமாக நாங்கள் இப்படி இருக்கிறோம். எனவே எனது தந்தை மது பழக்கத்தை கைவிட வேண்டும் என்பதற்காக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த ஒரு சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.