2016 – 17ம் கல்வி ஆண்டுக்கான தேசிய அளவிலான பள்ளிக்கல்வித் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்துக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. கேரளா முதலிடத்தையும், உ.பி., கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.
நாட்டில் உள்ள மாநிலங்களின் கல்வித்தரத்தை ஆய்வு செய்து நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின் வசதிகள், ஆசிரியர் – மாணவர் விகிதம் உள்ளிட்ட 44 காரணிகளை அடிப்படையாக கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
2016 – 17ம் கல்வி ஆண்டுக்கு வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில், 76.6% மதிப்பெண் பெற்ற கேரளா முதலிடம் பிடித்துள்ளது. 73.4% மதிப்பெண் பெற்ற தமிழகத்துக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. 2015 – 16ல் தமிழகம் 63.2% மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தது.