டெல்லியில் சி.ஏ.ஏ போராட்டம் என்ற பெயரில் வன்முறை போராட்டங்கள் திட்டமிட்டே அரங்கேற்றப்பட்டன. இதற்கு நிதியுதவி செய்தது பயங்கரவாத ஆதரவு அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ). எனவே அதன் பல அலுவலகங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. தன் குட்டுகள் வெளியாவதை பொறுத்துக்கொள்ள முடியாத பி.எப்.ஐ, இதற்கு பழியை ஆர்.எஸ்.எஸ் மீது சுமத்தியுள்ளது.
அதற்காக இன்று சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் அறிவித்துள்ளது. கொரோனாவை காரணம் காட்டி பல நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு இதற்கு அனுமதி அளிக்கலாமா? போரா ட்டம் என்ற பெயரில் கலவரம், வன்முறைகளில் ஈடுபடுவது இவர்களுக்கு வாடிக்கை. சமீபத்தில் நடைபெற்ற டெல்லி, பெங்களூரு கலவரங்களே இதற்கு சாட்சி. எனவே இதை போன்ற மத பயங்கரவாத ஆதரவு அமைப்புகளுக்கு தமிழகத்தில் போராட்டம் நடத்த தமிழக அரசு அனுமதியை வழங்குவது குறித்து சிந்திக்க வேண்டும்.