கற்றல், கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும்: கவர்னர்

பல்கலைகளின் காலி பணியிடங்களை நிரப்புவது மற்றும் கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து சிண்டிகேட் செனட் உறுப்பினர்களுடன் கவர்னர் ரவி நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை கவர்னர் மாளிகையில் கவர்னரின் முதன்மை செயலர் ஆனந்தராவ் பாட்டீல் முன்னிலையில் இந்த ஆலோசனை நடந்தது. பல்கலைகளின் கல்வி தரம் உயர்வு நிர்வாக சீர்திருத்தம் பல்கலைகளின் தன்னாட்சி அதிகாரங்கள் பறிபோவது குறித்து உறுப்பினர்கள் தெரிவித்தனர். பெரும்பாலான நேரங்களில் பல்கலை சிண்டிகேட் சென்ட் நிர்வாக குழு கூட்டங்கள் பல்கலைகளின் வளாகங்களுக்கு பதில் தலைமை செயலகத்திலேயே நடப்பது குறித்து கவலை தெரிவித்தனர். பாடத் திட்டங்கள் கற்பித்தல் கற்றல் முறைகளிலும் தேவையான நேரத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். பல்கலைகளின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பதவிகளில் அதிக காலியிடங்கள் உள்ளன. அவற்றை யு.ஜி.சி. விதிகளின்படி நிரப்ப வேண்டும் என கவர்னர் தெரிவித்தார்.

சில பல்கலைகளில் துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இந்த நிலையை தவிர்க்க புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ள அரசின் கவனத்தை உறுப்பினர்கள் ஈர்க்க வேண்டுமென கவர்னர் கேட்டு கொண்டார். தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்; தொழில் நிறுவனங்களின் நிபுணர்களை பல்கலைகளின் குறுகிய கால ஆசிரியர்களாக நியமித்து மாணவர்களின் தொழில் முனைவோருக்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் தங்களது திருமண நடைமுறை பாதிக்கப்படும் என்று பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டிலேயே பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பழங்குடி அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 12% பேர் பழங்குடியினர் ஆவர். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.