குஜராத் மாநில அரசு அறிவித்ததை போன்றே, கர்நாடகாவிலும் பாட திட்டத்தில் ‘பகவத் கீதை’ இடம் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கர்நாடக தொடக்க கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார். குழந்தைகளிடையே நமது பண்பாட்டு கலாசார விஷயங்கள் மெல்ல மறைந்து வருகின்றன. எனவே, அறநெறி பாடதிட்டத்தை அறிமுகப்படுத்த பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்பு ராமாயணம், மஹாபாரதம் தொடர்பான உள்ளடக்கம் கற்பிக்கப்படும் அறிநெறி வகுப்புகள் வாரம் ஒரு முறை இருந்தது. வரும் நாட்களில் இதை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்வோம். இதை கற்பிக்கலாம் என முடிவு செய்யப்பட்டால் கல்வி வல்லுனர்களுடன் இது குறித்து விவாதிக்கப்படும். மகாத்மா காந்தி உட்பட பலர் பகவத் கீதை, ராமாயணம், மஹாபாரதம் போன்றவை உத்வேகம் அளிப்பதாக கூறியுள்ளனர். மஹாத்மா காந்தியின் தாய் இவற்றை காந்திக்கு போதித்துள்ளார். பின், ‘ராஜா ஹரிசந்திரா’ நாடகம் அவரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது’ என்றார்.