எதிர்பார்த்ததைப்போலவே கர்நாடகாவில் ஆட்சி மாற்றத்திற்கு காரணமான அதிருப்தி ஏக்களின் பதவி பறிப்பு செல்லும் என்றஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமைந்துள்ளது . அதேசமயம் அதிருப்தி எம் எல் ஏக்கள் 2024 வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்ற மிதமிஞ்சிய அதிகாரத்தை கோர்ட் மறுத்துள்ளது . இதன்மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம் எல் ஏக்கள் மீண்டும் தேர்தலில் அதே தொகுதியில் ஆளும்கட்சியின் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .
இந்த தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸ் ,பா ஜ க தங்கள் தரப்பிற்க்கே வெற்றி என்று சொல்லி வருகிறது . இதற்கிடையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 15 சட்டசபை தொகுதிகளுக்கும் முந்தய தகுதிநீக்க நபர்களைஉடனடியாக கட்சியில் இணைத்து அவர்களையே வேட்பாளராகவும் அறிவித்துள்ளது .பா ஜ க.சார்பில் வேட்பாளராக அறிவிக்கும்போதே போதே இவர்கள் வெறும் வேட்பாளர்கள் அல்ல வென்றால் எதிர்கால அமைச்சர்கள் என்று அறிவித்துள்ளார் முதல்வரான எடியூரப்பா.
இந்த ஆட்சி ஏற்பட முக்கிய காரணமாக விளங்கிய அதிருப்தியாளர்களின் செயலை தொகுதி மக்கள் ஆதரிக்கிறார்களா அல்லது நிராகரிக்கிறார்களா என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் விடை தெரிந்துவிடும் . கர்நாடக பா ஜ க அரசை தக்கவைத்துக்கொள்ள குறைந்தது ஆறு அல்லது எட்டு எம் எல் ஏக்கள் ஜெயித்தாக வேண்டும் தேர்தல் நடக்கும் 15 தொகுதிகளில் ஏற்கனவே பா ஜ க மூலமாக போட்டியிட்டு தோற்றவர்களின் எதிர்ப்பையும் அதிருப்தியையும் சந்திக்க வேண்டும் . மேலும் அவர்களை சரிக்கட்ட எதாவது பதவிகளை கொடுக்கவேண்டும் .இப்படி நித்ய ஆயுசு பூரண கண்டம் என்ற நிலையிலேயே கர்நாடக அரசு பயணிக்கிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் பெரிய அளவில் நிவாரண பணிகள் எதுவும் சரிவர நடைபெறவில்லை என்ற குற்ற சாட்டும் உள்ளநிலையில் எடியூரப்பா அரசுக்கும் இந்த இடைத்தேர்தல்கள் மிகுந்த சவாலை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை . வென்றால் எந்தவித பிரச்சனையும் இன்றி இந்த ஆட்சியை தொடருவதோடு அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல்களை புதிய தெம்போடு எதிர்கொள்ளவார் மேலும் நீதிமன்ற வழக்கில் உள்ள இரு சட்டசபை தேர்தலும் எந்நேரத்திலும் அறிவிக்கப்படலாம் தற்போது நடைபெறும் தேர்தலிலேயே அதிக இடங்களில் வெற்றி பெறுவதன் மூலம்கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் எதிர்கட்சியினர், கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் என அனைவரின் நம்பிக்கையையும் பெறமுடியும். சாதிப்பாரா எடியூரப்பா காலம்தான் பத்தில் சொல்ல வேண்டும் .